கமலுக்கு நேரடியாக அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைவர்
  • 17:40PM Feb 09,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:40PM Feb 09,2019 Chennai

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்துத் தெளிவான நிலைப்பாடு இல்லாத தமிழகத்தில் தற்போது வரை திமுகக் காங்கிரஸ் கூட்டணி மட்டுமே.நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று கூறிய நிலையில் கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

Image result for ks alagiri rahul gandhi

தேர்தலை முன்னிட்டுக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் தற்போது நடந்துள்ளது.கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அணைத்து மாநில தலைவர்களும் பங்கேற்றனர்.புதிதாகப் பதவி ஏற்ற கே.எஸ்.அழகிரி தமிழகக் காங்கிரஸ் சார்பாகப் பங்கேற்றார்.

Image result for ks alagiri
நடந்து முடிந்த கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது எப்படி,கூட்டணி கட்சிகளுடனான உறவு குறித்து முக்கிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது.கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடமும் பேசிய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் திமுகக் கூட்டணியில் மக்கள் நீதி மையத்துடன் வந்து சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி நேரடியாக அழைப்பு விடுத்தார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top