காமிக் –காண் சூப்பர் ஹீரோ திருவிழா
  • 11:52AM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:52AM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

காமிக்காண் சூப்பர் ஹீரோ திருவிழா                    

சூப்பர்மேன் ,ஸ்பைடர்மேன் போன்ற பல சூப்பர் ஹீரோக்கள்  நம்           சிறுவயதில் ஒரு முக்கிய இடத்தைப்  பிடித்தவர்கள் .அப்படிப்  பட்டவர்களை நேரில் பார்க்க  வாய்ப்பு கிடைத்தால் ..??. ஆம் காமிக்காண்  இந்தியா வில் இவ்வருடம்  தொடங்கவுள்ளது .இம்முறை  நான்கு நகரங்களில் நடக்கவுள்ளது. suicide-squad-film-harley-quinn.jpg

 காமிக்ஸ்  பிரியர்களுக்கு ஒரு திருவிழா போல் இருப்பது சான் டியாகோவில் நடைபெறும் காமிக்-காண்  எனும் ஒரு வகை நிகழ்ச்சி . 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி  இன்று வரை தொடர்கிறது.                                                        

san-diego-comic-con-2016-pre-regristration-badges-1.jpgஆண்டுக்கு ஒருமுறை  நடத்தப்படும்  இவ்விழாவில்  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை  லட்சக்கணக்கானோர் கலந்து  கொள்கின்றனர். மக்கள் அவரவருக்குப் பிடித்த கேரக்டர்களைப் போல் உடை அணிந்து மகிழ்வார்கள். நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல விளையாட்டு நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் எனப் பல பொழுதுபோது அம்சங்கள் நடைபெறும். இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகச் சூப்பர் ஹீரோக்களாக நடித்தவர்களுடன் நேரில் உரையாடலாம் ,மேலும் வரவிருக்கும் புதிய காமிக்ஸ் பற்றிய விவரங்களும் வெளியிடப்படும்.இந்நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு அம்சம் குழந்தைகள் அவரவருக்குப் பிடித்தமான சூப்பர் ஹீரோ பயன்படுத்திய பொருட்கள் மற்றும் காட்ஜெட்ஸ் ஆகியவற்றை வாங்கிக்கொள்ளம்.

4df765_4dacf0d3f0464b85bb82c3e94fcd2665-mv2_d_3323_1261_s_2.jpg

  இந்தியாவில் காமிக்ஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் காமிக் -காண் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முக்கிய  நகரங்களான மும்பை ,பெங்களூர் ,ஹைதெராபாத்,டெல்லி ஆகிய இடங்களில் நடக்கிறதுஅயல் நாடுகளில் காமிக்காண்  ஏற்படுத்திய தாக்கத்தை இங்கு ஏற்படுத்தவில்லை என்றாலும் வரும் காலங்களில் அதன் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top