#Defence Services: இந்திய இராணுவத்தில் பல்வேறு உயர் அதிகாரி பணி - அதிகாரத்தை உங்கள் வசமாக்குவது எப்படி?
  • 17:04PM Nov 08,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:04PM Nov 08,2019 India

இந்திய இராணுவத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் Combined Defence Services Examination (II) 2020 தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | jobopening: எழுத்துத்தேர்வின்றி இன்றி எளிதாக அரசுப்பணி! இந்த ஒரு தகுதி மட்டும் போதுமானது!

#1. லெப்டினன்ட்கா (Indian Military Academy), லெப்டினன்ட் (Indian Naval Academy), லெப்டினன்ட்கா (Air Force Academy), லெப்டினன்ட் (Officers’ Training Academy-SSC (Men), லெப்டினன்ட் (Officers’ Training Academy-SSC (Women) போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

#2. தேர்ந்தெடுக்கப்படும் முறை: Combined Defence Services Examination (I), 2020 தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

#3. விண்ணப்பக் கட்டணம்: UR/ OBC பிரிவினர்களுக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள்/ SC/ ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

#4. விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

#5. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 19.11.2019.மேலும் வயதின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச உயரம், உடல் எடை மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். 

#Defence Services: CDS தேர்வுகள் 2.2.2020 அன்று நடைபெறும். இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளை போல நடத்தப்படும், உயரிய பதவிக்கான தேர்வுகளில் இதுவும் ஒன்று.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top