#No Due Form: கல்லூரி மாணவர்களின் ஆயிரத்தெட்டு கவலைகளில் ஒன்றான நோ டியு ஃபாரம்!!!
  • 14:25PM Feb 20,2020 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 14:25PM Feb 20,2020 Kodambakkam

ஆங்கிலத்தில் “பாட்டில் நெக்” என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துவார்கள். கோலி சோடாவில் இருக்கும் கோலி வெளிவர முடியாமலும், உள்ளே செல்லவும் முடியாமல் பாட்டிலின் கழுத்தில் சிக்கிக்கொண்டு இருக்கும். தமிழில் “கிடுக்குப் பிடி” என்று சொல்லுவார்களே அப்படி ஒருவருக்கு ஏற்படும் இக்காட்டான சூழ்நிலையை தான் “பாட்டில் நெக்” என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கல்லூரி மாணவர்களை கிடுக்குப் பிடி பிடிப்பதற்காக கல்லூரி ஆளுமை பயன்படுத்தும் சில கிடுக்குப் பிடிகளில் ஒன்று தான் இந்த “நோ டியு ஃபாரம்”. பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு வருடா வருடம் பரீட்சைக்கு முன்னதாக ஏற்படும் பாட்டில் நெக் சூழ்நிலை இது.

1.jpg

ஒரு மாணவர் கல்லூரியில் இருக்கும் லேபாரட்டரி, வொர்க் ஷாப், கேண்டீன், மெஸ், அட்டன்டன்ஸ் ஃபைன், லைப்ரரி, ஸ்போர்ட்ஸ் கிளப், ஹாஸ்டல் போன்ற இடங்களில் கணக்கு பாக்கி இல்லை என்று உறுதி படுத்தும் ஒரு ஆதாரம் தான் இந்த நோ டியு ஃபாரம். இந்த ஃபாரமை கிளியர் செய்தால் தான் சில தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் பரீட்சைக்கே அனுமதிக்கப் படுகின்றனர். ஒரு வேலை ஒரு மாணவர் குறிப்பிட்ட இடங்களில் கணக்கு பாக்கி வைத்திருந்து, பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டாலும் அந்த குறிப்பிட்ட கட்டணங்களை செலுத்திய பிறேகே அந்த மாணவர் அவரது எக்ஸாம் ரிசல்ட்களை பார்க்க முடியும். ஆக ஹால் டிக்கெட்டிற்கு அடுத்த படியாக கல்லூரியில் வருடாந்திர பரீட்சைக்கு முக்கியமான தேவை இந்த நோ டியு ஃபாரம் தான்.

3.jpg

ஒரு மாணவர் கல்லூரியில் எந்த கணக்கு பாக்கிகளும் வைத்திருக்காமல் இருந்தாலும், குறிப்பிட்ட இந்த டிப்பார்ட்மெண்ட்களில் அவரது நோ டியு ஃபார்மில் எந்த கணக்கு பாக்கியம் இல்லை என்று அந்தந்த டிப்பார்ட்மெண்ட்களில் இருக்கும் பொறுப்பாளரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். கையெழுத்து வாங்கி கல்லூரி தலைமையிடம் அந்த நோ டியு ஃபார்மை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வேலை நீங்கள் எதாவது ஒரு பொறுப்பாளரிடம் உங்களது கை வரிசையைக் காட்டி இருந்தால் அவ்வளவு தான். “ஓட ஓட ஓட தூரம் குறையல, பாட பாட பாட பாட்டு முடியல” கதை தான். உங்களை வைத்து செய்த பிறகே கையெழுத்துப் போடுவார்கள் அந்த பொறுப்பாளிகள். இப்போது தெரிகிறதா இந்த நோ டியு ஃபாரம் கல்லூரி மாணவர்களின் பாட்டில் நெக் என்று.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top