#Dress Code: கல்லூரி மாணவ மாணவிகள் இப்படிப்பட்ட ஆடைகளை அணிவது சரியா? இல்லையென்றால் எது சரி?
  • 14:11PM Apr 14,2020 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 14:11PM Apr 14,2020 Kodambakkam

பொதுவாகவே கல்லூரி மாணவர்கள் புதுப்புதுவிதமான ஆடைகளை அணிய ஆசைப்படுவார்கள். இளம் வயதில் மற்றவர் நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். ஆங்கிலத்தில் “செண்டர் ஆஃப் அட்ராக்ஷன்” என்று ஒரு வாக்கியம் உண்டு அதாவது எல்லாருடைய கவனமும் ஒரே இடத்தில் அல்லது ஒருவர் மீது இருப்பது. அந்த மாதிரி கல்லூரியில் நாம் தான் செண்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைப்பார்கள். இந்த ஆசை கல்லூரிப் பருவத்தில் வருவது அல்ல. பள்ளியில் படிக்கும் போதே இந்த ஆசையும் கனவும் மாணவர்கள் மத்தியில் உதயமாகிறது. புதிதாக கல்லூரியில் சேர்ந்து படிக்கப் போகும் மாணவர்கள் யூனிஃபார்ம் (பள்ளி சீருடை) என்ற கோட்பாட்டில் இருந்து விடுதலைப் பெற்று பிடித்தமான ஃபேஷன் ஆடைகளை அணியும் சுதந்திரம் கிடைக்கப் பெறுகின்றனர். அதனால் மாணவர்கள் புதுப்புதுவிதமான ஆடைகளை அணிய அதிகப்படியான ஆர்வத்தில் இருப்பார்கள்.

1b.png

ஒரு சில மாணவர்கள் கொஞ்சம் எல்லைத் தாண்டி கவர்ச்சியான ஆடைகளையும் அணிகின்றனர். இதனால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. மாணவர்களின் இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தான் கல்லூரிகளிலும் “ட்ரெஸ் கோட்” என்பதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும்பட்டது. எல்லா தனியார் கல்லூரிகளிலும் ஒரே மாதிரி அல்ல மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு ஒரு மாதிரியாகவும், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், ஆர்ட்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் இருக்கிறது. பெரும்பாலான கல்லூரிகள் கேடு வைப்பது பெண் மாணவர்களுக்குத்தான். அவர்களுக்காகவே பல புதிய சட்டத்திட்டங்களை தனியார் கல்லூரிகள் உருவாக்குகின்றனர்.

1d.jpg

மருத்துவம் சார்ந்த தனியார் கல்லூரிகளில் பெண் மாணவர்கள் சரியான ஆடைகளை அணிந்து வரவேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்களது ட்ரெஸ் கோட் விதிமுறைகளில் “புரபஷனல் ஆடைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ட்ரெண்டியான ஆடைகளை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அணியக்கூடாது என்று அர்த்தம். மருத்துவம் படிக்கும் பெண்கள் புடவைகளில் கூட வரலாம் ஆனால் லேக்கிங்க்ஸ், டைட் ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் ஸ்லீவ் லெஸ் டாப்களை அணியக்கூடாது என்று கூறியுள்ளனர். மருத்துவம் படிக்கும் ஆண் மாணவர்களுக்கு ஃபார்மல் ஷர்ட் மற்றும் பேண்ட் மட்டும் தானே என்று சொல்லி டாட் வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட அது ஒரு கலர் யுனிஃபார்ம் போலத்தான்.

1.jpg

இந்த வகையில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் இன்ஜினியரிங் மற்றும் ஆர்ட்ஸ் மாணவர்களுக்கு கொஞ்சம் கருணைக் காட்டப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். ஆடைகளில் எந்த வித வார்த்தைகளும் எழுதி இருக்கக் கூடாது, அதே சமயம் மாணவர்கள் அணியும் ஆடை உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான ஆடைகளை அணியக் கூடாது, அவ்வளவு தான். என்னதான் ட்ரெஸ் கோட்கள் இருந்தாலும் நமக்கு பொருத்தமான அதே சமையம் நமக்கு ஒரு கான்பிடன்சை கொடுக்கும் ஆடைகளை தான் நாம் அணிய வேண்டும். நமக்கு வசதியில்லாத ஆடைகளை அணிந்து சென்றால் ஏற்படும் விபரீதங்கள், நமக்கு மட்டும் தான் என்பதனையும் மாணவர்கள் உணர்ந்திட வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top