சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, மின்சாரச் சேவை பெற்றுள்ள இந்திய கிராமம்!
  • 18:39PM Mar 09,2019 Balrampur
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 18:39PM Mar 09,2019 Balrampur

இந்திய குடியரசு உருவாகி 70 ஆண்டுகள் கடந்தும் இன்று வரையில் இந்திய கிராமம் ஒன்றுக்கு மின்சாரச் சேவை கிடைக்காமல் இருந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள Jhalpi Para கிராமத்துக்குக் கடந்த 70 ஆண்டுகளாக மின்சாரச் சேவை வழங்கப்படாமல் இருந்துள்ளது. ஆனால் இந்தக் கிராம மக்களின் வீடுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்பட்டு, மின்சாரக் கட்டான பில் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த ஊர் மக்கள் கடந்த சில வருடங்களாக மின்சாரம் வழங்கக்கோரி போராடி வந்துள்ளனர். இவர்களின் கிராமத்துக்கு வரும் மின்சாரத் துறை அதிகாரிகளும் முடிந்த அளவுக்கு மின்சாரச் சேவை கொண்டு வந்துவிடுவோம் என்று வாக்குறுதி மட்டுமே அளித்துள்ளனர். இந்தக் கிராமத்தை சேர்ந்த மக்கள் விளக்கு, தீப்பந்தம் போன்றவற்றை மட்டுமே நம்பி இதனை வருடங்கள் வாழ்ந்துவந்துள்ளனர்.

இவர்களின் போராட்ட குரல் எப்படியோ ஊடகங்களின் காதுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரே இரவில் இந்த ஊர்மக்களின் கவலையை உலகறிய செய்துள்ளனர். இந்தச் செய்தி வைரலாகியதை தொடர்ந்து அம்மாநிலத்தின் உயர் அதிகாரிகள் இக்கிராமத்திற்கு மின் சேவை கொடுக்க முயற்சி எடுத்துள்ளனர். தற்போது 70 ஆண்டுகள் கழித்து இந்தக் கிராம மக்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இதனை ஊர்மக்கள் அனைவரும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். மின்சாரம் வந்ததைத் தொடர்ந்து அந்த ஊர்மக்கள் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளாகப் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் இருந்த அடிமைகள் போலத்தான் நாங்கள் இருந்தோம், ஊடகங்களின் உதவியால்தான் இப்போது மின்சாரத்தைப் பார்த்துளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Share This Story

Top