#water: நீருக்காக மாதம் 1,400 ரூபாய் போதும் - மண்டையை குடைந்து யோசிக்க வேண்டாம் : சென்னை மக்கள் இனி என்ன செய்யலாம்.?
  • 14:42PM Jun 21,2019 Chennai
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:42PM Jun 21,2019 Chennai

சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அறிவியல் ஆர்வலர் நாராயணன் கூறிய யோசனை பலராலும் ஆதரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட சில குறிப்புகள்: இந்த வறட்சி தற்காலிகம் அல்ல, இது ஆரம்பம், நிலத்தடி நீர் வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் ஃவுளூரைடு கலந்திருப்பதன் காரணமாக சுகாதார பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

நகரங்களில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வழங்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தண்ணீர் பற்றாக்குறை காலங்களுக்கு முன் சென்னை வாசிகளுக்கு தலா 90 லிட்டர் நீரை மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது நிலவிவரும் கடுமையான வறட்சி நிலைமைகளின் கீழ் ஒருவருக்கு 65 லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கிறது. 90 லிட்டர் கிடைக்கும் போது சென்னை வாசிகளுக்கு பெரிய சிரமமில்லை, நாம் 135 லிட்டர் என்றே கணக்கில் கொண்டு காண்போம். சென்னை மக்கள் தொகை 91,18,623. நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்றால், நாள் ஒன்றிற்கான மொத்த நீர் தேவை 1,231 மில்லியன் லிட்டர். (1 மில்லியன் = 10 லட்சம்) சுலபமாக நினைவில் கொள்ள 1M 10L.

இன்றைக்கு (வறட்சி காலத்தில்) சென்னை மாநகராட்சியால் சுமார் 500 மில்லியன் லிட்டர் மட்டுமே வழங்க முடிகிறது, ஆக பற்றாக்குறை 731 மில்லியன் லிட்டர். வறட்சி காலங்களுக்கு முன் டேங்கர் லாரி மூலம் 12,000 லிட்டர்  நீரை ரூபாய் 1,600-க்கு சென்னை மக்கள் பெற்று வந்தனர் (1000 லிட்டர் - ரூபாய் 133.33). இப்போது 12,000 லிட்டர் நீருக்கு ரூபாய் 3,500 முதல் 5,000 வரை வசூலிக்கப்படுகிறது (1000 லிட்டர் - ரூபாய் 291 - 416). இதை டேங்கர் லாரி நீரை சென்னை மாநகராட்சி வழங்கும் போது ரூபாய் 1,000 மட்டுமே வசூலித்து வந்தது (1000 லிட்டர் - ரூபாய் 83.33). ஆக 1000 லிட்டருக்கு 133 ரூபாய் செலுத்த மக்கள் தயாராக இருக்கின்றனர், அதையே 83 ரூபாய்க்கு வழங்கினால் மிகுந்த சந்தோசப்படுகின்றனர். நீர் எமது பிறப்புரிமை, நீருக்கு பணம் வசூலிப்பது உகந்ததல்ல என்று நீங்கள் முழங்கினாலும் நிதர்சனம் இதுவே. சரி இப்போது 24மணி நேரமும் தடையின்றி அதே 1000 லிட்டர் நீரை 41 ரூபாய் விலையில் வழங்கினால் மக்கள் எதிர்பார்களா என்ன?? அதற்க்கு சாத்தியம் இருக்கிறதா?

கடல் நீரிலிருந்து உப்பை நீக்கி குடிநீராக மாற்றும் ஆலை, இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இதனை வெற்றிகரமாக செய்துவருகிறது. 3,500 கோடியில் அமைக்கப்பட்ட சோரெக் உப்புநீக்கும் ஆலை (Sorek desalination plant) நாள் ஒன்றுக்கு 627,000 கன மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குகிறது. 1 கன மீட்டர் = 1,000 லிட்டர். 627,000 கன மீட்டர் = 627,000,000 லிட்டர் (627 மில்லியன் லிட்டர்) வறட்சி கால கிட்டத்தட்ட நீர் பற்றாக்குறை இதுவே. சோரெக் உப்புநீக்கும் ஆலை, லாபத்துடன் இஸ்ரேலிய நீர் துறைக்கு 1000 லிட்டர் நீரை 58 US சென்டுகளுக்கு (41ரூபாய்) விற்கிறது. சரி, இப்போ அந்த 3,500 கோடி ரூபாய்க்கு எங்கே போவது? 3,500 கோடி என்பது அதிகமாக தெரிந்தாலும், 2017-18 நிதியாண்டில் தமிழகத்தின் மது வருவாய் ரூபாய் 26,797 கோடி. உள்நாட்டு நுகர்வோருக்கான மின்சார கட்டணத்தை குறைக்க தமிழக அரசு வழங்கிய மானியம் ரூ .3,230 கோடி.

2017-18ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் 2,48,360 கோடி. 2018-19ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் 2,64,556 கோடி. இதில் சிறிய மாற்றங்கள் செய்யலாம் அல்லது நீர் சுத்திகரிப்பு அலையை தனியாரின் முதலீட்டுடனோ, அல்லது மத்திய அரசிடமிருந்து கடனாக பெற்றோ தொடங்கலாம்.குடிநீர் தட்டுப்பாடுக்காக தமிழக அரசு 5,398 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 41 ரூபாய் செலவில் (லாபத்துடன்) உற்பத்தி செய்த 1000 லிட்டர் நீரை 83ரூபாயில் விநியோகம் செய்தால் முதலீடை 4 ஆண்டுகளை விட குறைவாகவே எடுத்துவிடலாம். 4 பேர் கூடிய குடும்பம், நீருக்காக மாதம் தோறும் ரூபாய் 1,400 மட்டும் செலவு செய்ய நேரிடும். (135/1000 லிட்டர் x 4 x 30.5 நாட்கள் x 83 ரூபாய்) இது டேங்கர் லாரி நீரின் விலையை விட குறைவே, தரத்தில் டேங்கர் லாரியின் நீரை விட உயர்ந்ததே.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top