#MineFactory டேய், ஏமாத்தினாலும் ஒரு நியாயம் வேணாமா டா? சீன நிறுவனத்தின் சிரிக்கவைக்கும் மொள்ளமாரித்தனம்!
  • 21:21PM Oct 29,2019 China
  • Written By public
  • Written By public
  • 21:21PM Oct 29,2019 China

பொதுவாக Made In China என்று விற்கும் பொருட்களை யோசித்துப் பார்த்து வாங்கவேண்டும் என்று கூறுவார்கள், அது ஏன் இந்தச் செய்தியை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். பெரிய தொழிற்சாலை வைத்து நடத்துபவர்களுக்கு Environmental Regulation போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். இதனைக் கவனிக்காமல் கட்டுப்பாட்டை மீறினால், அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும், சில சமயங்களில் அந்த நிறுவனத்திற்குச் சீல் கூட வைக்கப்படும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் அந்தக் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்கும். ஆனால் சில நிறுவனங்கள் அதனைக் கடைபிடிக்காவிட்டால் அந்தப் பிரச்னையைத் தவிர்க்க மாற்றுயோசனை வைத்திருக்கும்.

#Plastic நீங்கள் சாப்பிடும் ருசியான உணவில் 10 சதவீதம் பிளாஸ்டிக் உள்ளது! பயப்படாம படிங்க!

இந்த நிறுவனமும், அதுபோன்ற ஒரு அற்புதமான யோசனை வைத்திருந்தது! சீனாவின் Xintai நகரில் சுமார் 7000 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது Changsheng Rock Material Factory. அந்நகரின் பெயர்பெற்ற நிறுவனமாகக் கருதப்படும் இந்தத் தொழிற்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு Environmental Regulation மீறியுள்ளது. இதனைச் சமாளிக்க அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஒரு திருட்டு வேளையில் ஈடுபட்டனர். கல் சுரங்கத்தைச் சுற்றி மரமில்லாவிட்டால் எப்படியும் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மரம் இருப்பதுபோல் காட்டிக்கொள்ள அங்குக் குவித்து வைக்கப்பட்டிருந்த பாறைகளில் பச்சை நிற பெயிண்ட்டை அடிக்கத் திட்டமிட்டனர்.

Image result for Changsheng Rock Material Factory

இதை Satellite Image ஆகப் பார்க்கும்போது நிறுவனத்தைச் சுற்றி மரங்கள் இருப்பது போலவே இருக்கும் என்று எண்ணி இந்தத் திட்டத்தை முயற்சித்தனர். அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் அதிகாரிகளின் உத்தரவை ஏற்று அங்கிருந்த பாறைகளில் பச்சை நிற பெயிண்ட்டை அடித்தனர். இவ்வளவு பிளான் செய்தவர்கள் இது சரியாக வருமா என்று யோசிக்கவில்லை. Xintai’s Environment Bureau அதிகாரிகள் எதிர்ச்சியாக இதனைப் பார்க்கும் போது தெளிவாக இது பெயிண்ட் என்று கண்டுபிடித்துவிட்டனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில் அந்நிறுவனத்தின் அவர்களின் தவறை ஒற்றுக்கொண்டனர். அரசை ஏமாற்ற நினைத்ததால், Xintai’s Environment Bureau அதிகாரிகள் அந்நிறுவனத்திற்குச் சீல் வைத்துவிட்டனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top