#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்!
  • 10:02AM Sep 18,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:02AM Sep 18,2019 India

திடீரென்று மொபைல் திருட்டு போவது அல்லது அறியாமல் தவறவிடுவதால் பொருள் இழப்பு மட்டுமல்ல தகவல் இழப்பும் மிகப்பெரிய அளவில் நம்மை பாதிக்கிறது. மொபைல்போனில் தான் பலரும் தங்களுடைய பல தனிப்பட்ட ஆவணங்கள், படங்கள், நிகழ்ச்சிக் குறிப்புகள் எனப் பலவற்றையும் பதிந்துவைத்திருக்கின்றனர்.

இத்தகைய தகவல்களை பதிந்து வைத்திருக்கும் பயனர்கள் மொபைலை இழக்கும்போது என்ன செய்வது? எங்கு முறையிடுவது? கிடைக்குமா? என்ற குழப்பத்தைத் தொடர்ந்து ஏற்படும் பதற்றம், மன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், திட்டம் ஒன்றை 2012ல் தொலைத் தொடர்புத் துறை தீட்டியது.

மொபைல் போன் திருடப்பட்டு விட்டாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ அதை கண்டுபிடித்து தர  Central Equipment Identity Register சுருக்கமாக CEIR என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இத்திட்டத்திற்காக மிகப்பெரிய அளவில் பங்களிப்பை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மொபைல்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு இத்திட்டம் இறுதியாக தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொபைல் திருட்டு குறித்து புகார் தெரிவிக்க இணையதளம் ஒன்றை தொலைத் தொடர்புத் துறை தற்போது தொடங்கியுள்ளது. https://www.ceir.gov.in என்ற இத்தளத்தில் காணாமல் போன உங்கள் மொபைல் போன் IMEI எண் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். நீங்கள் வாங்கிய மொபைல் ஒரிஜினல் IMEI எண் கொண்டதா? திருடப்பட்ட புகார் தெரிவிக்கப்பட்ட மொபைலா? போன்ற விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். | #Defence: பதறும் உலக நாடுகள் : இந்தியாவை சுற்றி லேசர் சுவரை போல பாதுகாப்பு - பராக்கிர பலம் பெறும் இந்திய இராணுவம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top