#Bank Job: அருகிலேயே வேலை, அரிதான வாய்ப்பு - சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அதிக காலிபணியிடம்!
  • 10:43AM Aug 28,2019 Salem
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:43AM Aug 28,2019 Salem

சேலம்மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும்சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை  நேரடி  நியமனம் மூலம்   நிரப்புவதற்காக,   இந்தியக்   குடியுரிமையுடைய, பின்வரும்தகுதிகளைபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

#1. உதவியாளர் பணிக்கு 89 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#2. 01.01.2019 அன்று விண்ணப்பதாரர்  18வயது  பூர்த்தி  அடைந்தவராக  இருக்க  வேண்டும்  (அதாவது 01.01.2001அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).

#3. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பல்கலைக்  கழகங்களால்  வழங்கப்படும் பட்டப்  படிப்பிற்குப்  பதிலாக,  பதினைந்து  ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம்.  ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்விலும், மேல் நிலைக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

#4. கூட்டுறவுப்  பயிற்சி  பெற்றவர்கள்  மட்டுமேமேற்படி  உதவியாளர்/எழுத்தர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க  வேண்டும்.    கூட்டுறவுப்  பயிற்சி  குறித்த விரிவான  விவரங்கள்  அடங்கிய பதிவாளர் அவர்களின் சுற்றறிக்கை எண் 29/2013, நாள் 18.07.2013 சேலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (http://www.slmdrb.in/doc_pdf/Eligible.pdf)

#5. விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/-ஆகும். ஆதிதிராவிடர்,  பழங்குடியினர்,  அனைத்துப்  பிரிவையும்  சார்ந்த மாற்றுத்  திறனாளிகள், அனைத்துப்  பிரிவையும்  சார்ந்த  ஆதரவற்ற  விதவைகள்  ஆகியோருக்கு  இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. 

#6. அறிவிக்கப்பட்டுள்ள    காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம்  http://www.slmdrb.in/index.php என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

#7. மேற்கண்ட  பதவிக்கு  விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்களின்  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி உள்ளவர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.  எழுத்துத் தேர்வில் கலந்துக் கொள்ளத் தகுதி பெற்ற நபர்களின் பட்டியல் சேலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://www.slmdrb.in/index.php வெளியிடப்படும். 

#8. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சேலம்மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தங்கள் சொந்த செலவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.  விண்ணப்பதாரர்கள்  எழுத்துத்  தேர்வில்  பெற்ற  மதிப்பெண்கள்  அடிப்படையிலும்,  இட  ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி அடிப்படையிலும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளத் தகுதி பெற்ற நபர்களின் பெயர்ப் பட்டியல் சேலம்மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.   

#Bank Job: இந்த பணியிடம் குறித்த மேலும் விவரங்களை பார்வையிட கீழ் கண்ட இணைப்பில் சென்று பார்க்கவும்... இங்கே கிளிக் செய்க

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top