#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது!
  • 11:32AM Sep 19,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:32AM Sep 19,2019 Tamil Nadu

இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள 12,075 Clerk காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், வங்கி பணியாளர் தேர்வாணயம் (IBPS) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

#1. Clerk பணிக்கு மட்டும் 12,075 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சம்பள விகிதம்  IBPS விதிமுறைப்படி இருக்கும்.

#2. 1.9.2019 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.உச்ச வயது வரம்பில் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC/ PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.

#3. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.

#4. தகுதியானவர்கள் IBPS நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு  மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

#5. ஆன்லைன் எழுத்துத் தேர்வை பொறுத்த வரையில் Preliminary மற்றும் Main எழுத்துத் தேர்வு என்று இரு கட்டங்களாக நடைபெறும்.

#6. ஆன்லைன் Preliminary எழுத்துத் தேர்வுகள், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

#7. ஆன்லைன் Main எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறும்.

#8. விண்ணப்பக் கட்டணமாக 600 ரூபாய் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.100

#9. தகுதியானவர்கள் www.ibps.in என்ற இணையதள முகவரிக்கு சென்று  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

#IBPS: ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை பார்க்கவும். HOW TO APPLY

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top