#SafeSearchKids: உங்க குழந்தை பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டுபிடிக்க எளிய வழி?
  • 11:08AM Oct 02,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 11:08AM Oct 02,2019 Chennai

தற்சமயங்களில்  இணையம்(internet) என்பது அனைவருக்கும் எளிய கிடைக்கபெறும் வசதி ஆகிவிட்டது. இனி வரும் நாட்களில்  திறன்பேசியும்  சமூக வலைதளங்களும் தான் 90% குற்றங்களுக்கு காரணமாக அமையும். பெரியவர்களே செல்போன் பயன்படுத்தும் போது எது சரி எது தவறு என தெரியாமல் தவிக்கும் போது,குழந்தைகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால்  அது பல சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும். இவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது  ஒவ்வொரு பெற்றோரின் கடமை, அதட்டி சொல்லாமல் பக்குவமாக நண்பனை போல இதன் விளைவுகளை சொன்னால்  மட்டுமே, அவர்கள் மனதில் உள்வாங்கிக்கொள்வார்கள்.  

முன்னரெல்லாம் குழந்தைகளுக்கு தனி அறையே கிடையாது.எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும்,  குழந்தை பருவம் அடையும்  வரை அம்மா அல்லது அப்பா பக்கத்தில் தான் உறங்கும் நிலை இருக்கும். இப்போது எட்டு வயது ஆனாலே தனி அறை,அவர்களுக்கு தனி கணினி வேறு..    முதலில் குழந்தைகளின் தனி அறையில் இருக்கும் கணினியை காமன் ரூமிற்கு மாற்றி பயன்படுத்த பழக்க வேண்டும். குழந்தைகளின் திறன் பேசிகளுக்கு கடவுச்சொல் வைத்திருந்தால் உடனே  அதை நீக்கச் சொல்ல வேண்டும். அல்லது அவர்களின் கடவுச்சொல்லை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு பெற்றோரிடம் இது போன்ற விஷயங்களை மறைப்பதற்கு என்ன இருக்கிறது ? அப்படி மறைக்க ஏதேனும் இருக்கிறது என்றால் அதில் விவகாரமும் இருக்கிறது.

இணையத்தின் ஆபத்துக்களையும் (Dark Web)   இணையம் மூலம் என்னவெல்லாம் குற்றங்கள் எல்லாம் செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு புரியும் விதத்தில்  எடுத்து சொல்லுங்கள்.  முன்பின் தெரியாதவர்களிடம் அரட்டை அடிப்பது, மெசேஜ் அனுப்புவது , இவற்றால் என்ன பயன்?  என்ன நடக்கலாம்? என்பதை முன்கூட்டியே சொல்லிக்கொடுங்கள்.பெரும்பாலான குழந்தைகள்  YouTube பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர், மிகவும் சிறிய குழந்தைகளாக இருந்தால் YouTube-ற்கு பதிலாக YouTube Kids செயலியை பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள். 

உங்கள் இணைய விளம்பரத்தை தடுக்கும் AdBlocker-ஐ ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது தேவையற்ற விளம்பரங்களை குழந்தைகள் கிளிக் செய்யாமல் பார்த்து கொள்ளும்.  அடுத்ததாக கூகுளில் SafeSearch - ஐ ஆன் செய்து  வையுங்கள். இதன் மூலம் ஆபாச வார்த்தைகள், படங்களை search engine-இல் தவிர்க்கலாம்.முடிந்தால் குழந்தைகளுக்கு செல்போனே கொடுக்காமல் வளர்க்க முயலலாம்.. #matrimony: எரிச்சலூட்டும் திருமணவரன் எதிர்பார்ப்புகள் ! இப்படியெல்லாம் மாப்பிள்ளை எதிர்பார்த்தா இளைஞர்களின் நிலை??

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top