#BoxOffice: வசூல் ரீதியாக தோல்வியடைந்த நல்ல தமிழ் திரைப்படங்கள்!
  • 11:40AM Apr 29,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:40AM Apr 29,2019 Kodambakkam

சில திரைப்படங்கள் திரையரங்கங்களில் வெளியாகும் பொழுது ரசிகர்களின் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றியடையாமல் தோல்வியடையும். ஆனால் சில காலங்களுக்கு பிறகு வசூல் ரீதியாக தோல்வியை தழுவிய அந்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களாக உருவெடுக்கும். அந்த குறிப்பிட்ட படங்களுக்காக தனி ரசிகர்களே தற்பொழுது இருக்கின்றனர். அப்படி Box Office Collectionனில் தோல்வியடைந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தற்பொழுது நீங்காத இடம் பிடித்த சில திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம் வாங்க.

12.jpg

#1. நமது உலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இந்த வருசையில் இடம் பெறுகிறது. அப்படி அவர் நடிப்பிலும் உருவாக்கத்திலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்து தற்பொழுது தரமான திரைபடம் என்று ரசிகர்கள் என்னும் படங்கள் இவை தான். “ஹே ராம்” “அன்பே சிவம்” “ஆளவந்தான்”

#2. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “புதுப்பேட்டை” மற்றும் “மயக்கம் என்ன” இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக தோல்வியடைந்து தற்பொழுது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” மற்றும் “இரண்டாம் உலகம்” படங்களும் வசூல் ரீதியாக தோல்வியைடைந்த நல்ல படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#3. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “இருவர்’ திரைப்படம் தோல்வியடைந்தாலும் தற்பொழுது இளம் இயக்குனர்களால் “master piece” என்று பாராட்டப்படுகிறது.

#4. இயக்குனர் தியாகராஜான் குமாரராஜா அவர்கள் இயக்கிய முதல் திரைப்படமான “ஆரண்ய காண்டம்” படம் தேசிய விருது பெற்றது ஆனால் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

#5. இயக்குனர் நவீன் அவர்களது முதல் படமான “மூடர் கூடம்” திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்த திரைப்படம்.

#6. “உரியடி” படத்தின் முதல் பாகம், அதன் இரண்டாம் பாகத்தின் வெற்றியை கொண்டே இப்படி ஒரு படம் வந்தது என்று அநேகருக்கு தெரியவந்தது.

#7. “குற்றம் கடிதல்” திரைப்படம் பல விருதுகளை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிகப்படியான திரையரங்கங்கள் கிடைக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

#BoxOffice தமிழ் திரைப்பட ரசிகர்களின் கண்ணோட்டம் தற்பொழது மாறத்தொடங்கிவிட்டது, சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக சில நல்ல கருத்துள்ள கலைநயம் கொண்ட படங்கள் பேசப்பட்டும் வெற்றியடைந்தும் வருகின்றன.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top