#Job Fair: ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்த அதிரடி திட்டம்! வேலைவாய்பு முகாம்!!
  • 02:16AM Jul 06,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 02:16AM Jul 06,2019 Kodambakkam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து பல கரடுமுரடான பாதைகளில் பயணித்து வருகிறார். தேர்தல் என்கிற போருக்கு முன்னதாக தனது படை தளபதிகளை தயார் நிலையில் வைத்துகொள்ள முடிவெடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். அவரது ரசிகர்களும் அவரது என்னம் அறிந்து முன்பை காட்டிலும் அதிகமாக மன்ற பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பல நாட்களுக்கும் மேலாக மக்களுக்கு கைகொடுக்கும் சேவையாக, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துக்கொண்டு வந்தனர். எங்கெங்கே தேவைப்படுகிறதோ அங்கங்கே லாரிகளில் குடிநீரை கொண்டு சென்றனர்.

12.jpg

இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, ரஜினி மக்கள் மன்றம் மீது ஒரு இனம் புரியாத நம்பிக்கையும் மக்களுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து ஏறி, குளங்களை தூர்வாருவதிலும், மரங்களை நடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் மழைநீர் சேமிப்பு தொட்டியை இலவசமாக மைத்து தருகின்றனர்.

13.jpg

சமீப காலமாக பொது மக்களையும் தங்களுடன் இணைத்துக்கொண்டு பல நல்ல திட்டங்களையும், காரியங்களையும் தமிழகத்தில் நிறைவேற்றி வருகின்றனர் ரஜினி மக்கள் மன்ற காவலர்கள். ஏழை, பணக்காரன், ஜாதி, மதங்களை கடந்து அனைவரும் சேவையில் ஈடுபட்டுவந்த பொழுது தான் உறுப்பினர் சிலருக்கு ஒரு நல்ல திட்டத்திற்கான பொறி தட்டியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பலரும் பல வேலைகளில் இருந்தாலும் சிலர் இன்றளவும் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்காக ஒரு வேலைவாய்பு முகாமை “தலைவர்” சார்பாக அமைத்தால் என்ன என்று முடிவெடுத்துள்ளனர்.

14.jpg

ரசிகர்கள் மட்டும் அல்லாமல் மற்ற இளைஞர்களும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் இருப்பதை அறிந்த நமது சூப்பர் ஸ்டார் இந்த திட்டத்தை உடனடியாக பெரிய அளவில் செயல்படுத்த முடிவெடுத்துள்ளாராம். மன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் வேலை செய்யும் இடங்களில் என்னென்ன வேலைவாய்பு இருக்கிறது, தமிழகம் முழுவதும் இருக்கும் தொழில் சார்ந்த வேலை வாய்புகள் எனென்ன இருக்கிறது என்று கண்டுபிடித்து இந்த முகாமிற்கு வரவழைக்க முடிவெடுத்துள்ளனர். இது ஒருமுறையல்ல அடுத்தடுத்த முகாம்கள் மாவட்ட ரீதியாக நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top