#Beta carotene: தண்ணியில இருக்கும் பச்சை பாசிக்கு இவ்வளவு பவரா? தெரிஞ்சா நீங்களும் காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவீங்க!
  • 09:42AM Oct 15,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 09:42AM Oct 15,2019 Tamil Nadu

வியாபார ரீதியாக விற்கப்படும் பொருள்களில் ஸ்பைருலினா எனப்படும் பச்சை பாசியில் தான் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இதன் ஒவ்வொரு கிராமிலும் காரட்டில் உள்ளதைப்போல் 15 மடங்கு அதிகம் உள்ளது. இவைகளைத் தவிர ஆரஞ்சு, கரும்பச்சை, அடர்மஞ்சள் நிறமுடைய பப்பாளி, மாம்பழம், பசலைக்கீரை மற்றும் சிவப்புநிற பழம் காய்கறிகளிலும் பீட்டா கரோட்டின் உள்ளது.  

செயற்கையாக தயாரிக்கப்படும் பீட்டாகரோட்டின் விலை இயற்கை பீட்டா கரோட்டினைவிட பாதிவிலையில் கிடைத்தாலும், அது புற்றுநோயை தடுக்காது. இன்றைக்கு பல இடங்களில் தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு ஸ்பைருலினா பாசி வியாபார ரீதியாக வளர்க்கப்படுகிறது. பாசி உலர வைக்கப்பட்டு, பவுடர் போல மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில இடங்களில் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்களும் அறிவியலாளர்களும் பீட்டா கரோட்டின் அதிகமுள்ள உணவுகளை உண்ணுவதால் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர். இதன் காரணமாகவே பழம், காய்கறி, முழுதானியம் ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள தேசிய புற்றுக்கழகம் அறிவுறுத்துகிறது. 

ஸ்பைருலினா 3.5 பில்லியன் ஆண்டுகளாக இவ்வுலகத்தில்  காணப்படுகின்றன. இந்த நுண்ணிய நிலப்பச்சை பாசியை மனிதன் பல நூறு ஆண்டுகளாக அறிந்திருந்தாலும் தற்போதுதான் இதன் உடல் நலக் காப்புத் திறத்தினை மனிதன் அறிவார்த்தமாக உணர்ந்துள்ளான். இது பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் பலனளிப்பதை புரிந்து கொண்டு இன்றுவரை பல கோடி மக்கள் நாற்பது நாடுகளில் இதனை உண்டு உடல் நலத்தைப் பேணி வருகின்றனர். இந்த பீட்டாகரோட்டின் மற்ற உணவுப்பொருட்களைவிட ஸ்பைருலினாவிலும், டுனாலிவினாலும் மிக அதிக அளவில் காணப்படுகிறது. | body heat: உடம்புக்குள்ள குபு குபுன்னு இருக்குதா? உடல் சூட்டை எப்படியெல்லாம் போக்கலாம்? சிம்பிள் தான்!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top