#Clean Shaven: ஷேவிங் கிரீம் காலியாகிவிட்டதா? கவலை வேண்டாம்! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதுமானது!!!
  • 15:55PM Oct 28,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:55PM Oct 28,2019 Kodambakkam

நூற்றில் எண்பது சதவிகித ஆண்கள் ஷேவிங் கிரீமின் உதவியுடன் தான் மிகவும் மிருதுவான கிளீன் ஷேவ் செய்து வருகின்றனர். ஆனால் இரசாயனப்பொருட்கள் அதிகம் கலந்த இந்த ஷேவிங் கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தினால் தாடி நரைப்பதும், சில சறுமே பிரச்சனைகள் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சில நேரங்களில் அவசர அவசரமாக ஷேவ் செய்யும் நேரத்தில் கிரீம் காலியாகிவிடும். கடுப்பில் பழைய குளியல் சோப்பை பயன்படுத்தி அரைகுறையாக ஷேவ் செய்துவிட்டு கிளம்பிவிடுவோம். இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு இயற்கையான ஒரு தீர்வு இருக்கிறது. ஷேவிங் கிரீம்களுக்கு பதிலாக நாம் என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம் அது எந்த அளவிற்கு நமக்கு ஆரோக்கியமானது என்பது பற்றியும் பார்க்கலாம் வாங்க.

mian.jpg

#1. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கண்டிப்பாக பேபி ஆயில் இருக்கும். இந்த பேபி ஆயில் ஒரு சிறந்த மிருதுவான ஷேவிங்கை கொடுக்க வல்லது. இதை பயன்படுத்தும் போது எந்த வித எரிச்சல்கள் மற்றும் கீறல்கள் ஏற்படாது.

#2. உங்களுக்கான அடுத்த சிறந்த சாய்ஸ் ஹேர் கண்டிஷனர் தான். தினமும் தலைக்கு பயன்படுத்துகிற ஹேர் கண்டிஷனரை பயன்படுத்தினாலே போதும். இதில் சருமத்தை பாதுகாக்கும் வகையில் பல பொருள்கள் இருப்பதனால் இது உங்களுடைய சருமத்துக்கு பல நன்மைகளைத் தருகின்றது.

#3. பட்டர்களில் பல வகை உண்டு. அதில் சியா பட்டரும் ஒரு வகை. இதை பெரும்பாலும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சியா பட்டரைப் பயன்படுத்தியே ஷேவ் செய்யலாம். சருமம் இன்னும் மென்மையாகும். மேலும் இதை பயனடுத்தினால் ஆஃப்ட்டர் ஷேவ் கிரீமை பயன்படுத்த தேவையில்லை.

#4. இதையெல்லாம் விட எந்தவித செலவும் இல்லாத அதேசமயம் ஆரோக்கியமான இயற்கையான ஷேவிங் க்ரீம் ஒன்று இருக்கிறது அது தான் கற்றாழை. கற்றாழை ஜெல்லை ஷேவிங் கிரீமுக்கு பதிலாக பயன்படுத்துவது அதிக ஆரோக்கியமானது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்.

#Clean Shaven - இந்த பொருட்களை எல்லாம் பயன்படுத்தினால் அற்புதமான கிளீன் ஷேவ் கிடைப்பது உறுதி. மேலும் பீனட் பட்டர் மற்றும் தேன் கூட நல்ல ஷேவிங் கிரீம்களாக பயன்படும், ஆனால் காஸ்ட்லியான இவைகளை தொடர்ந்து இப்படி பயன்படுத்தவும் கூடாது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top