#Avatar2 தாமதமாக இதுதான் காரணமா? கதாநாயகி வெளியிட்ட படத்தின் உண்மை நிலவரம்.
  • 16:39PM Apr 13,2019 Los Angeles
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:39PM Apr 13,2019 Los Angeles

கடந்த 2009 ஆம் ஆண்டு உலக அளவில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்ற ஹாலிவுட் திரைப்படம். “டைட்டானிக்” புகழ் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி “Avatar” திரைப்படம். இந்த படத்தின் குளோபல் பாக்ஸ் ஆபிஸ் சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த பத்து வருடத்தில் இந்த இமாலைய சாதனையை இது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை.

1550041056.jpg

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் மூன்றாம் பாகத்தையும் ஒரு சேர கடந்த பத்து வருடங்களாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்கள். மேலும் படத்தின் நான்காம் மற்றும் ஐந்தாம் பாகங்களையும் எடுக்கபோவதாகவும் அறிவித்திருந்தார். படத்தின் மூன்றாம் பாகத்தில் “டைட்டானிக்” படத்தின் கதாநாயகி Kate Winslet முக்கிய வேடத்தில் நடித்து வருவதும் தெரியவந்துள்ளது. பத்து வருடங்கள் ஆகியும் இந்த படத்தின் புதிய பாகத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள் கோடான கோடி பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1552901683.jpg

zoe-saldana-avatar-991507-1280x0.png

சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் Zoe Saldana அளித்த பேட்டியில் ஒன்றில் “Avatar படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருப்பதில் பெருமைப்படுகிறேன். முதல் பாகத்திற்கு மேலாக எங்களது உழைப்பையும் பங்கையும் அளித்திருக்கிறோம். அடுத்து வரப்போகும் படங்கள் முதல் பாகத்தைவிட ஆழமாக ரசிகர்கள் மனதை கவரும். படம் வெளியானால் தான் தெரியும், ஏன் இவ்வளவு தாமதமாக படம் வெளியாகிறது என்று” என்று கூறியுள்ளார். மேலும் புதிய பாகங்களின் துணை பெயர்களையும் எப்போது வெளியாகும் என்றும் கூறியுள்ளார் Zoe Saldana.

1550041030.jpg

Avatar2 – The way of water (Dec 2020)

Avatar3 – The seed bearer (Dec 2021)

Avatar4 – The tulkun rider (?)

Avatar5 – The Quest of Eywa (?)

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top