#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள்! அவங்க ருசியே தனி தான்!!
  • 04:58AM May 23,2019 Karaikudi
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 04:58AM May 23,2019 Karaikudi

செட்டிநாடு சாப்பாடு என்றாலே அது தனித்துவம் வாய்ந்தாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் செட்டிநாடு பலகாரங்கள் ரொம்பவே நன்றாக இருக்கும். அதோடு சில பலகாரங்கள் செட்டிநாட்டில் தான் கிடைக்கும், அதற்காக காரைக்குடி வரைக்கும் போய் சாப்பிடுபவர்கள் கூட இருக்கிறார்கள். அப்படி செட்டிநாடு ஸ்பெஷல் என்று பெயர் பெற்ற சில பலகாரங்களின் தொகுப்பு உங்களுக்காக.

2.jpg

தேன்குழல் முறுக்கு, “சாதாரண முறுக்கு தானே” என்று நினைத்து விடாதிர்கள், இந்த முறுக்கு செட்டிநாட்டில் மட்டும் தான் கிடைக்கும். தீபாவளி வந்து விட்டால், இந்த தேன்குழல் முறுக்கை போட்டி போட்டு கொண்டு வாங்குவார்கள் மக்கள். பச்சை அரிசியை உறவைத்து, வெள்ளை நிற தூணியில், நிழலில் காயவைத்து, அரிசியோடு வறுத்த வெள்ளை முழு உளுந்தம் பருப்பு சேர்த்து அரைத்து. நேர்த்தியான முறையில் மொரு மொருவென்று எண்ணையில் சுட்டெடுத்த இந்த தேன்குழல், சாப்பிட சாப்பிட சாப்பிட்டு கொண்டே இருக்க தோன்றும்.

3.jpg

சீப்பு சீடை, பொதுவாக சீடை எல்லா ஊர்களிலும் பிரபலம் தான். இந்த சீப்பு சீடையை நீங்கள் செட்டிநாட்டில் தான் பார்க்க இயலும். இந்த சீப்பு சீடை முறுக்கு மாவில் இருந்து தான் தயாரிக்கின்றனர். பண்டைய காலத்தில் முறுக்கு மாவை அச்சில் போட்டு நீல வாக்கில் பிழிந்து, சீப்பு வயத்து அதில் கொடுப் போட்டு, ஒரு விரலில் சுற்றி அற்புதமாக செய்து வந்திருக்கின்றனர். தற்போது சிப்பு சீடை செய்வதர்க்கும் முறுக்கு அச்சுகள் வந்துவிட்டது. பண்டிகை காலங்களில் அதிகம் பார்க்க கூடிய பலகாரங்களில் இதுவும் ஒன்று.

4.jpg

வெள்ளை பணியாரம், நாம் நிறைய பணியாரங்கள் பார்த்திருக்கின்றோம், இருந்தாலும் இந்த வெள்ளை பணியாரம் தனித்துவம் வாய்ந்ததை. எல்லா பண்டிகைகளிலும் இந்த வெள்ளை பணியாரம் கண்டிப்பாக எல்லா செட்டிநாடு வீடுகளிலும் பார்க்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. வெள்ளை பணியாரத்திற்கு பச்சை அரிசியும் வெள்ளை உருட்டு உளுந்தும் சேர்கின்றனர். இந்த பணியாரத்திற்கு அரிசியும் உளுந்தும் அளவு பார்த்து எடுக்கும் முறையே மிகவும் வித்தியாசம் ஆனது. உழக்கில் பச்சை அரிசியை எடுத்து, அதன் தலையை தட்டி உளுந்தை அரிசியின் மீது வாய்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் செட்டிநாட்டு மக்கள். மாவை தண்ணியாக அரைத்து, எண்ணையில் உற்றியதும், பணியாரம் உப்பி எண்ணையின் மேல் எழும்பி வருவதை பார்க்கவே அழகா தான் உள்ளது. இந்த பணியாரத்தை கார சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையே தனி தான்.

5.jpg

கந்தர் அப்பம், இது ஒரு இனிப்பு பலகாரம். சில கோவில்களில் இந்த பலகாரத்தை பிரசாதமாக வழங்குவதும் உண்டு. வெள்ளை பணியாரத்திற்கு எவ்வாறு மாவு அரைக்கபடுகின்றதோ அது போன்று தான் இந்த கந்தரப்பத்திற்கும் அரைக்கப்படுகின்றது. அரக்கப்பட்ட மாவில் வெள்ளம் சேர்த்து சுட்டால் கந்தரப்பம் தாயார். அதிரசத்தை விட இந்த கந்தரப்பம் சுவையாக இருக்கும் என்றும் சிலரின் கருத்து.

6.jpg

பால் பணியாரம், இந்த பணியாரமும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்களில் ஒன்று. சிறு பிள்ளைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பலகாரம் இந்த பால் பணியாரம். இந்த பணியாரத்திர்க்கும் வெள்ளை பணியாரத்திற்கு எடுத்த பச்சை அரிசியும் வெள்ளை முழு உளுந்தும் தான் உபயோகப் படுத்துகின்றனர், ஆனால் அளவு வேறு, பணியாரத்தை எண்ணையில் போட்டி சுட்டு, தண்ணிரில் முக்கி எண்ணை சற்று பொணவுடன் பசும் பாலிலோ அல்லது தேங்காய் பாலிலோ சர்க்கரை சேர்த்து அதில் பணியாரத்தை போட்டு ஊறவைத்து சாப்பிட்டால் சுவையே தனி தான். இந்த பால் பணியாரத்தை சூடாகவும் சாப்பிடலாம், அரின பிறகும் சாப்பிடலாம், எப்படி சாப்பிட்டாலும் மிகவும் நன்றாக இருக்குமாம், அதோட இந்த பால் பணியாரத்தை பிடிக்கவில்லை என்று யாரும் கூற வாய்பே இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

7.jpg

பால் கொழுக்கட்டை, கொழுக்கட்டை என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான தின்பண்டம் தான். அதிலும் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை மிகவும் சுவையாகவே இருக்குமாம். அரிசிமாவில் கொழுக்கட்டை செய்து அதை வெல்லமோ அல்லது சர்க்கரையோ சேர்த்த தேங்காய் பாலில் உறவைத்து தயாரிக்கப்படுகின்றது இந்த பால் கொழுக்கட்டை. விநாயகர் சதூர்த்தி அன்று மட்டுமில்லாமல் சாதாரண நாட்களில் கூட இந்த கொழுக்கட்டை செய்யப்படுகின்றது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவும் ஆகும் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை.

8.jpg

உக்கரை, இந்த இனிப்பு பலகாரம் எல்லா வீடுகளிலும் விஷத்திற்கு செய்கிறார்கள். பொதுவாக கடலை பருப்பும் பாசிப்பருப்பும் வைத்து செய்ய படுகிறது இந்த உக்கரை. ஆனால் செட்டிநாட்டில் பாசிப்பருப்பும் ரவையும் சேர்த்து சுலபமாக குறைந்த நேரத்திலேயே செய்து விடுகிறார்கள். குறிப்பாக செட்டிநாடு கல்யாண வீடுகளில் சாயங்காலம் நேரத்தில் இந்த உக்கரை வழங்கப்படுகின்றது.

9.jpg

வாழைப்பூ  வடை, நிறைய பேர்களுக்கு இந்த வாழைப்பூ வடையை பற்றி தெரியாது. வாழைப்பூவில் வடை செய்ய முடியுமா என்று கூட நிறைய பேர் கேட்டுள்ளனர். சற்று வித்தியாசமானது இந்த வாழைப்பூ வடை. மெதுவடையும் பருப்பு வடையும் தான் தமிழ்நாட்டில் அதிகமாக செய்வார்கள் ஆனால் செட்டிநாட்டில் வாழைப்பூவை வைத்து அருமையாக வடை சுடுகின்றனர். இந்த வடை பருப்பு வடைசெய்வது போன்று தான் செய்கிறார்கள். பருப்பு வடை மாவுடன், வாழைப்பூவை அரைத்து சேர்த்து செய்து. சுட சுட பரிமாறப்படுகிறது இந்த வாழைப்பூ வடை.

10.jpg

வாழைக்காய் கோலா உருண்டை, பொதுவாக கோழிக் கரியிலும் ஆட்டு கரியிலும் தான் கோலா உருண்டை கேள்வி பட்டிருப்போம். காய்கறி வைத்து கோலா உருண்டை பண்ண முடியும் என்பதே சில பேருக்கு ஆச்சர்யமாக தான் இருக்கும். ஆச்சர்யமாக இருந்தாலும், இந்த வாழைப்பூ கோலா உருண்டை செட்டிநாட்டில் மிகவும் பிரபலம். வாழைக்காயை வேக வைத்து மசித்து, பொட்டுகடலை மாவு சேர்த்து செய்யபடுகின்றது இந்த வாழைப்பூ கோலா உருண்டை. கோழியிலும் மட்டனிலும் செய்யப்படும் கோலா உருண்டைகளை விட இந்த வாழைப்பூ கோலா உருண்டை மிகவும் நன்றாக இருக்கின்றது.

Top