#Relationship: நீங்க அதுக்குச் சரிபட்டு வருவீங்களானு தெரியனுமா..? அப்போ இதையெல்லாம் உங்களால முடியுமான்னு தெரிஞ்சிக்கோங்க..!
  • 13:22PM Jun 08,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 13:22PM Jun 08,2019 Chennai

இது நாள் வரைக்கும் நீங்க Single ஆஹ் இருந்துட்டு திடீர்னு ஒரு Relationship-ற்குள் போகணும்னு ஆசையா இருக்க..? ஆனால் நீங்கள் அந்த விஷயத்திற்குத் தயாரா இருக்கோமா..? என்ற சந்தேகம் கண்டிப்பா வரும்.அப்படி சந்தேகம் இருக்கும் எல்லாருமே இதையெல்லாம் உங்களால பண்ண முடியுமான்னு தெரிஞ்சிக்கோங்க.

Image result for Couples

#1. நீங்கள் எந்தக் காரணத்திற்காகவோ Single ஆஹ் இருக்கலாம்.ஆனால் ஒரு Relationship-ற்குள் செல்லும் போது உங்களுக்குள் எதாவது Serious ஆன சிந்தனைகள் இருந்தால் அப்படியே பின்வாங்கி விடுங்கள்.அது நீங்கள் இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம்.

#2. நீங்கள் ஒரு Serious ஆன Relationship-ற்குள் போகும் முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.உங்கள் வாழகியில் நீங்கள் ஒரு நெருங்கிய உறவு வேண்டும் என எதிர்பார்க்கறீர்களா..? அல்லது மற்றொரு நபரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா..?.இதற்குப் பதில் தெரிந்த பின்னரே முடிவெடுங்கள்.

#3. தனிமையில் இருந்த போது உங்களுக்கு இருக்கும் நீங்கள் அனுபவித்த சுதந்திரத்தை துறக்க தயாரான..? என்பதை முடிவு செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் ஒருவருடன் உறவில் இருக்கும் போது சில சமயம் உங்களின் சுதந்திரம் பறிபோய்விட்டதே என்று யோசித்தால் உங்களின் மொத்த உறவும் கேள்விக்குறியாகிவிடும்.

#4. நெருங்கிய உறவுகளில் இருக்கும் போது உடலுறவு இப்பொழுதெல்லாம் கட்டாயமாகிவிட்டது.சிலருக்கு இதில் பெரிதாக உடன்பாடு இருப்பதில்லை,இது போன்ற பிரச்சனைகளை உங்களால் சமாளிக்க முடியுமா..? என்று யோசியுங்கள்.முடியுமென்றால் முடிவெடுங்கள் இல்லையெனில் சிரமம் உங்களுக்குத் தான்.

#5. தனியாக இருக்கும் போது நீங்கள் முடிவுகளை எப்படி வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம்.ஆனால்,புதிய உறவு முறை என்ற வரம்பிற்குள் செல்லும் போது தனிப்பட்ட மதிப்புகளை ஒருபுறம் வைத்து இருவரின் எண்ணங்களுக்கும் மரியாதை கொடுக்கத் தயாரா..? என்பதை முடிவு செய்யுங்கள்.

நீங்கள் உறவுமுறையில் ஈடுபடுவதற்கு முன்பு இது போன்ற விஷயங்களுக்குத் தெளிவான முடிவுகளை எடுத்துவிடுங்கள்.இல்லையெனில் உங்களுக்குத் தான் பின்னாளில் தேவையில்லாத பிரச்சனைகளை வரும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top