டைட்டிலுக்கு ஒரு கோடி கேட்ட தயாரிப்பாளர்! அதற்கு இயக்குனரின் பதில் என்ன தெரியுமா?
  • 16:30PM Feb 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:30PM Feb 09,2019 Kodambakkam

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அனுராக் கேஷப். இவர் சமீபத்தில் நடிகை நயன்தாரா நடித்த “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் தற்பொழுது பாலிவுட் திரையுலகில் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். “கேங்க்ஸ் ஆஃப் வாசேய்புர்” படத்தை கடந்த 2௦12 ஆம் ஆண்டு இயக்கினர் இயக்குனர் அனுராக் கேஷப், தற்பொழுது நடிகை டாப்ஸியை வைத்து “womaniya” என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இந்த womaniya என்ற பெயருக்கு தற்பொழுது அனுராக் அவர்களுக்கும் தயாரிப்பாளர் திரு.பிரிதீஷ் நன்டி என்பவருக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்து வருகிறது.

anurag-kahsyap-actor_d.jpg

அனுராக் தனது கேங்க்ஸ் ஆஃப் வாசேய்புர் படத்தில் இந்த womaniya என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாகவும், தயாரிப்பாளர் நன்டி இந்த பெயரை தனது அடுத்த படத்திற்காக ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறுகிறார். இந்த தலைப்பு வேண்டும் என்றால் ருபாய் ஒரு கோடியை கொடுத்துவிட்டு தலைப்பை எடுத்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர். அதற்கு இயக்குனர் அனுராக் கேஷப், “தலைப்பை அவரே வைத்துக்கொண்டு, எதிர்பார்த்து, எதிர்பார்த்து அதை பற்றவைத்து அதில் அவரே உட்கார்ந்து குளிர்காயட்டும், நாங்கள் தலைப்பை மாற்றிவிட்டோம்” என்று கூறியுள்ளார். அவர் தனது படத்திற்கு “saand ki aankh” என்று பெயரிட்டுள்ளார் அதற்கு “காட்டெருமையின் கூர்மையான கண்கள்” என்று பொருள்.

anurag-kashyap-1537465043.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top