கோடிகளில் வரி கட்டும் அமிதாப்பச்சன்! மலைக்கவைக்கும் வளர்ச்சி...
  • 17:09PM Apr 13,2019 Mumbai
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:09PM Apr 13,2019 Mumbai

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் அமிதாப்பச்சன் கடந்த நிதி ஆண்டுக்கு மொத்தம் 70 கோடியை வரியாக கட்டியுள்ளார். ஆரம்பத்தில் வதந்தியாக இருந்த இந்த செய்தி தற்பொழுது அமிதாப்பச்சன் அவர்களது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களிலேயே அதிக வரி கட்டிய பிரபலமாக தற்பொழுது அமிதாப்பச்சன் பார்க்கப்படுகிறார்.

51700620.jpg

சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிகை டாப்ஸியுடன் இணைந்து நடித்த “BADLA” எனும் த்ரில்லர் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதை தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து “Brahmastra” என்ற படத்திலும், நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து “உயர்ந்த மனிதன்” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது அவரது முதல் நேரடி தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

jpeg.jpg

இந்த ஆண்டு நடிகர் அமிதாப்பச்சன் “புல்வாமா” தாக்குதலில் பலியான ஐம்பது ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா பத்துலட்சம் உதவித்தொகையாக கொடுத்துள்ளார். அதுவும் மத்திய அரசிடம் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிஜ விலாசத்தை பெற்று சரியாக உதவித்தொகை சென்று சேரும்படி செய்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு பீகாரை சேர்ந்த 2084 ஏழை விவசாயிகளின் வங்கி கடனை தானாக முன்வந்து அடைத்துள்ளார் அமிதாப்பச்சன் அவர்கள். உண்மையிலேயே அவர் உயர்ந்த மனிதர் தான்.

maxresdefault.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top