#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி!! அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா?
  • 12:16PM Sep 18,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:16PM Sep 18,2019 Kodambakkam

எவர் என்ன படிக்க நினைத்தாலும் அந்த படிப்பிற்கான ஒரு குறிப்பிட்ட தொகை கல்விக் கட்டணமாக செலுத்த தேவைப்படுகின்றது. அதாவது படிப்பதற்கு நிதியுதவி என்பது அவசியம். பெற்றோர்கள் நமது கல்விக்கு செலவழிக்கும் தொகையும் ஒரு விதமான நிதியுதவி தான். உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள், சிறந்த கல்லூரிகளில் சீட் கிடைத்தும் , போதிய பணம் இல்லாததால் படிப்பை பாதியிலேயே கைவிட்ட வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

1.png

#1. கல்விக் கடனை காட்டிலும் தனி நபர் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம். ஆனால் கல்விக் கடனை குறைந்த வட்டியில் வங்கிகள் வழங்குகின்றன. கல்வி கடன் மூலம் மாணவர்கள் கல்லூரி மற்றும் அது தொடர்பான கட்டணத்தை செலுத்தலாம்.

#2. இந்தியாவில் நீங்கள் படிக்கின்றீர்கள் என்றால் வங்கிகள் குறைந்தபட்சம் பத்து லட்சம் முதல் பதினைந்து லட்சம் வரை கடனாக வழங்குவார்கள். வெளிநாடுகளில் படிக்கின்றீர்கள் என்றால் அதிகபட்சம் இருபது லட்சம் வரை வழங்குவார்கள்.

#3. நீங்கள் வாங்கும் கல்விக் கடன் நான்கு லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ஜாமீன் தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் கடன் தொகை இருந்தால், உங்களுக்காக யாராவது ஜாமீன் கையெழுத்து போடா வேண்டி இருக்கும்.

#4. கல்விக் கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள் இவை, பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம், வயதுச் சான்றுக்கான ஆவணங்கள், அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்று, உத்தரவாதமளிப்பவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், உயர் கல்வித் தகுதியின் நகல்கள், விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் வைத்திருக்கும் ஆறு மாத வங்கி அறிக்கை.

#5. மேலும் விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழில்நுட்பப் படிப்புகள், மேலாண்மைப் படிப்புகள் மற்றும் இதர தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.

#Student Loan Scheme - கல்வி கடன் தொகையை படிக்கும் காலத்தில் மாணவர்கள் திருப்பி செலுத்த வேண்டியதில்லை. படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் அல்லது வேலை கிடைத்ததும் கடனை திருப்பி செலுத்த முயற்சி செய்ய வேண்டும். கடனைப் பெற்றதில் இருந்து 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திட வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top