#Rotel: இந்த ரெட் பஸ்சை எங்கேயாவது பார்த்ததுண்டா? இனிமே பார்ப்பீங்க!! தென்னிந்தியாவைக் குறிவைக்கும் ஜெர்மன் நிறுவனம்!!
  • 12:06PM Aug 14,2019 Rajasthan
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:06PM Aug 14,2019 Rajasthan

வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்த புதிய ரக பேருந்து பரிச்சயமான ஒன்றாக இருக்கலாம், வாடா இந்தியர்களுக்குக் கூட இப்படி ஒரு வாகனம் சாலையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கலாம். பார்ப்பதற்கு ஏதோ டூரிஸ்ட் வண்டியைப் போலத் தோன்றுகிறது ஆனால் ஏன் இப்படி அநியாயத்திற்கு ஊர்ந்து செல்கிறது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் இது டூரிஸ்ட் வண்டி அல்ல இது ஒரு நகரும் 5 ஸ்டார் ஹோட்டல் என்று.

16.jpg

சரியாக 1945 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டது “ROTEL” என்ற சுற்றுலா நிறுவனம். இவர்களது ஸ்பெஷாலிட்டியே விருந்தாளிகளை உணவோடு ஊர் சுற்றிக் காட்டுவது தான். கடந்த 2007 ஆம் ஆண்டு இவர்கள் இந்தியாவின் மலைப்பகுதியில் முதல் நகரும் உணவுப் பேருந்தை அறிமுகம் செய்தனர். இந்த பேருந்தில் சுமார் நாற்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

14.jpg

ஸ்டார் ஹோட்டல்களே தொற்று போகும் அளவிற்கு மிக சிறப்பான விருதினை பரிமாறி தங்களது விருந்தாளிகளை அசத்துவது தான் இவர்களது கெட்டிக்காரத்தனம். பஸ்ஸுக்குள் இப்படி ஒரு பிரம்மாண்டத்தைப் பார்த்ததும் வாயடைத்துப் போகத்தானே செய்யும். மேலும் இவர்களது உபசரிப்புகள் நம்மை மீண்டும் மீண்டும் இந்த அனுபவத்தை ருசிப்பார்க்க தூண்டும்.

15.jpg

ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கடந்து தற்பொழுது ராஜஸ்தான் வரை வந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் பெயர் “Rotel Tour” என்பது தான். ராஜஸ்தானை கடந்து பெங்களூர், கேரளா மற்றும் தமிழகம் வரை அவர்களது விரிவாக்கத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் rotel tour நிறுவனம். விரிவில் சென்னையின் பிரதான சாலைகளில் இந்த நகரும் ஹோட்டலின் பிரவேசம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top