#Course: டிஜிட்டல் மார்க்கெட்டிங்! எங்கே படிக்கலாம்!! எப்படி படிக்கலாம்!!!
  • 00:14AM Oct 03,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 00:14AM Oct 03,2019 Kodambakkam

கடந்த ஆண்டின் படி நமது இந்தியாவில் இணையதள சேவையை பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 500 மில்லியன் அதாவது 50 கோடி என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வளர்ந்து வருவதால், கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை இந்த துறை சார்ந்த படிப்புகளை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கான தேவை அதிகரித்துள்ளதால் பல கல்வி நிறுவனங்கள் இந்த துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன. ஆன்லைன் படிப்புகளை பொறுத்தவரை வேலைக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை நேரம் முடிந்த பின் வீட்டிற்கு வந்து தங்கள் ஓய்வு நேரத்தில் சவுகரியமாக அவர்களால் படிக்க முடியும். நகரங்களில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேடி அலையும் நேரத்தை நாம் இதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.

2.jpg

வகுப்பறையில் படிக்க ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக Offline படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். இதில் நேரடியாக ஆசிரியர்களிடம், உடன் படிப்பவர்கள் அல்லது நண்பர்களிடம் நமது சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளலாம். கல்லூரி படித்து முடித்துவிட்டு புதிதாக வேலை தேடுபவர்கள் அல்லது மற்றொரு வேலைக்கு மாறும் போதும் சான்றிதழின் மதிப்பு ரொம்பவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதே போல அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து சான்றிதழ் வழங்குகிறார்களா? என்பதை ஒருமுறைக்கு பலமுறை விசாரிப்பது நல்லது.

5.jpg

தனியார் நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் பொழுது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டதா? என்பதையும் விசாரிக்க வேண்டும். நவீன தொழில்துறைக்கு ஏற்ப பாடத்திட்டம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். தொழில்துறை வல்லுநர்களிடமும், முன்னாள் மாணவர்களிடமும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான ஆலோசனைகளை கேட்பதன் மூலம், நாம் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும். இந்த கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை படித்தால் வேலைக் கிடைக்குமா? ஊதிய விகிதம் என்ன? என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top