16 ஆம் நூற்றாண்டு மன்னராக நடிக்கும் அக்ஷை குமார்! விவரம் உள்ளே...
  • 18:25PM Apr 12,2019 Mumbai
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 18:25PM Apr 12,2019 Mumbai

பாலிவுட் நடிகர் அக்ஷை குமார் நடித்த சீக்கியர்களின் வரலாற்று திரைப்படமான “கேசரி” மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அக்ஷை குமாருக்கு அடுத்தடுத்து மூன்று படங்கள் இதே வருடத்தில் வெளியாகிறது. பாலிவுட் இயக்குனர் Raj Mehta இயக்கத்தில் அவர் நடித்துவந்த “Good News” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது.

DyS0I-VVYAEG90Z.jpg

மேலும் அவர் நடித்து வரும் “Mission Mangal” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் ஜகன் சக்தி இயக்கி வரும் இந்த புதிய திரைப்படம் இந்தியாவின் “மங்கள்யான்” விண்கலத்தை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்ஷை குமாரின் ரசிகர்களை அதிக அளவில் எதிர்ப்பார்க்கும் புதிய சூப்பர் காமெடி திரைப்படமும் அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது. அது அக்ஷை குமார் நடிக்கும் “Housefull” எனும் திரைப்படத்தின் நான்காம் பாகம் எனதும் குறிப்பிடத்தக்கது.

DyS0KK3UwAIJmC7.jpg

இந்த படத்தை பற்றிய புதிய தகவல் தற்பொழுது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தின் முதல் பாகத்தில் அக்ஷை குமார் பதினாறாம் நூற்றாண்டு மன்னராக நடித்து வருவதும். இந்த காட்சிகள் ராஜஸ்தானில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருவதும் பாலிவுட் திரையுலகில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக “முகமூடி” படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

AKSHAY-1.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top