#Adventurous: கொல்லிமலை! சித்தர்களின் மர்மம் தேடி ஒரு சுற்றுலா பயணம்!!
  • 13:05PM Jul 05,2019 Kolli Hills
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 13:05PM Jul 05,2019 Kolli Hills

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் தான் இந்த கொல்லிமலை. பார்ப்பதற்கு தான் சிறய மலைத்தொடராக இருக்கும் ஆனால் இந்த மலை குன்றுகள் சுமந்திருக்கும் மர்மங்களும், ரகசியங்களும் ஏராளம். இந்த கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனேக பேர்கள் ஆன்மீக சிந்தனை அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம் தமிழர் வரலாற்றில் பெருமையுடன் கூறப்படும் சித்தர்களின் ஆதிக்கம் இந்த கொல்லிமலையில் அதிகமாக இருப்பது தான். சித்தர்கள் உண்மையில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும் குறிப்புகள் இந்த கொல்லிமலையில் அதிக அளவில் காணப்படுகிறது.

11.jpg

இங்கே இருக்கும் இயற்கை காட்சிகள், படகு சவாரி, பூங்கா, அறிய வகை மூலிகைகள், அருவிகள், கோவில்கள், குகைகள் மற்றும் சித்தர்களின் மர்மங்களை அறிய இன்றும் பல சுற்றுலாப்பயணிகள் கொல்லிமலைக்கு வருகை தருகின்றனர். சுமார் 70 கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி தான் கொல்லிமலையை சென்றடைய முடியும். கார் அல்லது ஜீப்களில் புதிதாக பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் நன்கு பயிற்சி பெற்ற டிரைவர்களை அழைத்து செல்வது நல்லது. இருசக்கர வாகனத்தில் ஒரு அட்வென்ச்சர் ட்ரிப் அடிக்க நினைக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு கொல்லிமலை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

14.JPG

சித்தர்கள் இந்த பூவுலகில் கடிமையான தவம் புரிய அமைதியான மற்றும் இயற்கை மூலிகைகள் அதிகம் கிடைக்கப்பெற்ற மலைக் குன்றுகளை தேடி திரிந்து, இறுதியாக கொல்லிமலையை தேர்ந்தெடுத்ததாக வரலாறு கூறுகிறது. கடுமையான நோய்களை கொல்லக்கூடிய மூலிகைகள் இந்த மலைத்தொடரில் கிடைக்கப்பெற்றதால் சித்தர்கள் இந்த மலைத்தொடருக்கு கொல்லிமலை என்று பெயர் வைத்ததாக கூறுகின்றனர். “பி.ஏ ஹாலிடே இன்” என்ற ரிசார்ட் கொல்லிமலையின் இயற்கை அழகை நாம் தங்கி அனுபவிக்க ஏற்ற இடமாக இருக்கிறது.

12.jpg

கொல்லிமலையை பொறுத்தவரை ஒரு முக்கியமான ஆன்மீக ஆலையம் என்னவென்றால் அது “அரப்பளீஸ்வரர் ஆலையம்” தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வீரமிக்க மன்னனாக திகழ்ந்த “வல்வில் ஓரி” எனும் மன்னரால் கட்டப்பட்டது இந்த சிவன் கோவில். இந்த கோவிலுக்கு பின்புறமாக இருக்கும் “சிற்றருவி” குளித்து மகிழ எதுவாக அமையப்பெற்றிருக்கிறது. அங்கே கிடைக்கும் “சைவ ஆட்டுக்கால் சூப்பு” கொல்லிமலை சுற்றுலாப்பயணிகளின் “energetic drink”. அடுத்ததாக நீங்கள் பார்க்கவேண்டிய முக்கியமான இடம் “ஆகாய கங்கை” நீர்வீழ்ச்சி. ரூபாய் பத்து மட்டும் கட்டிவிட்டு சுமார் 1196 படிக்கட்டுகளை தாண்டி முன்னேறி சென்றால் வருகிறது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல காலை ஆறு முதல் பகல் மூன்று மணிவரை தான் அனுமதி தருகின்றனர்.

15.JPG

இந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சில சித்தர்கள் நம் கண்முன் தோன்றி மறைவார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த அருவிக்கு அருகில் பல குகைகள் காணப்படுகின்றன. அங்கே இன்றும் சித்தர்கள் வந்து தவம் புரிவதாக கூறப்படுகிறது. ஆகாய கங்கைக்கு பக்கத்தில் ஒரு மடம் ஒன்று இருக்கிறது, அங்கே ஒரு இரவுக்கு ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு தங்கலாம். இரவு நேரங்களில் அங்கே நிகழும் சில அமானுஷ்யங்களை ஆராய அந்த மடம் நமக்கு உதவுகிறது. மேலும் கொல்லிமலை பற்றிய சில ஆன்மீக ரகசியங்களையும் மடத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடிகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top