#Dimple:கன்னக்குழியோட இருக்கவங்க அழகா இல்லையாம் குறையோட இருக்காங்களாம்..
  • 12:59PM May 22,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 12:59PM May 22,2019 Chennai

பொதுவா ஒருவருக்குக் கன்னத்தில் குழி விழுந்தால் பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.சினிமா பிரபலங்களுக்குக் கன்னக்குழி இருந்த போதும் ரசிகர்கள் உயிரையே விட்ருவாங்க. லைலா ஆரம்பிச்சு இணைக்கு இந்தியாவையே கலக்கிட்டு இருக்கத் தீபிகா படுகோனே, அலியா பட் வரை அவங்களோட கன்னக்குழிக்காகவே பல ரசிகர்கள் இருக்காங்க.

Image result for Srushti dimple smile

கன்னக்குழி பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் அழகா இருக்கும்.ஆனால் என்னைக்காவது இந்தக் கன்னக்குழி எப்படி வருதுன்னு யோசிச்சிருக்கீங்களா..?.ஒரு வீட்டில் இருக்கும் அண்ணன் தம்பிகளிலேயே யாருக்காவது ஒருத்தருக்கு என் குழி வருதுன்னு யோசிச்சிருக்கீங்களா..?.உண்மையா சொல்லனும்னா கன்னக்குழி அழகில்லை நமக்கு இருக்கும் குறை.

Image result for alia bhatt dimple smile

கன்னத்திற்கும், அதன் உள்ளே இருக்கும் தசைக்கும் இடையே ஏற்படும் பிரச்னை காரணமாகத் தான் இந்தக் குழி விழுகிறது.பிரச்சனையின் தன்மையைப் பொறுத்து தான் சிலருக்கு லேசாகவும் , சிலருக்கு நன்றாகத் தெரிகிறது.இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கன்னக்குழி மரபுரீதியாகத் தொடரும்.

Image result for shahrukh khan dimple smile

கன்னக்குழி விழும் ஓர் ஆண்,கன்னக்குழி விழும் பெண்ணைத் திருமணம் செய்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நிச்சயம் குழி விழும்.இதே கன்னக்குழி உள்ள ஓர் ஆண் , சாதாரண முகம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களின் குழந்தைக்கு 50 சதவீதம் கன்னக்குழியுடனே குழந்தை பிறக்கும்.

Related image

கன்னத்தில் குழி விழுவது குறையாக இருந்தாலும் பார்க்க ரொம்ப அழகா இருப்பதால் யாரும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தமாட்டார்கள். இனிமேலாவது மத்தவங்களுக்கு இல்லாத ஏதாச்சு உங்களுக்கு இருந்தா அதைப் பத்தி தெரிஞ்சிக்கோங்க.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top