#Vintage Cinema: நாடகத்தில் நடிக்க கே.பியின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட நாகேஷ்!!!
  • 01:57AM Nov 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 01:57AM Nov 09,2019 Kodambakkam

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களது இயக்கத்தில் “நெஞ்சில் ஓர் ஆலயம்” என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. படத்தில் நாகேஷ் அவர்களது காமெடி தமிழ் சினிமா ரசிகர்களிடம் உச்சக்கட்ட வரவேற்பை பெற்றிருந்த நேரம். அப்போது இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் மேடை நாடகங்களை எழுதி இயக்கிக் கொண்டிருந்தார். நாகேஷிற்கு கே.பியின் நாடகங்கள் பிடித்து போக, அவரது நாடகக் குழுவில் தன்னை இணைத்துக்கொள்ள ஆசை. ஒரு நாள் கே.பியிடம் “பாலு பேசாமல் நான் உன்னுடைய நாடகக் குழுவில் சேர்ந்து கொள்ளவா? ஏனென்றால் வேறு எந்த நாடகக் குழுவும் எனக்கு செட் ஆகவில்லை” என்று கேட்டாராம் நாகேஷ். அதற்கு பாலச்சந்தர் “நீ நடித்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” பிரமாதமாக ஓடிக்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் உனக்கு ரொம்ப நல்ல பெயர் கூட. அந்தப் படத்தின் வெற்றியினால் இப்பொ உனக்குன்னு ஒரு பாப்புலாரிட்டி இருக்கு. அதனால் இப்போ நீ நடிக்கறதுக்கு ஒரு நாடகம் எழுதனும்னா, உன்னை ஹீரோவாக வைத்து எழுதினால்தான் சரியாக இருக்கும். இப்போது எனது எந்த நாடகத்தில் நீ நடித்தாலும் அது சரியாக இருக்காது” என்று சொல்லிவிட்டாராம் கே.பி.

16IN_SS_KB_4.jpg

“நீ எனக்காக ஒரு நாடகம் எழுதுகின்ற வரையில், நீ இப்போது நடத்தி வரும் நாடகங்களில் ஏதாவது ஒரு சீன்ல நான் வர்றேனே” என்று நாகேஷ் கேட்டபோது “வேஷம் இருந்தா நான் சொல்ல மாட்டேனா?” என்று பாலச்சந்தர் கூறினாராம். “சார் போஸ்ட்னு ஒருத்தன் லெட்டர் கொண்டு வந்து தருகிறானே, அந்த போஸ்ட்மேனாக நான் நடிக்கிறேனே?” என்று நாகேஷ் சொன்ன போது பாலச்சந்தரால் மறுத்துச் சொல்ல முடியவில்லை. “சரி, அந்த சீன்ல நடி. ஆனால் “சார் போஸ்ட்” என்கிற வசனத்தைத் தவிர வேறு ஒரு வார்த்தையும் நீ பேசக்கூடாது” என்ற நிபந்தனையுடன் நாகேஷை அந்த நாடகத்தில் நடிக்க வைத்தாராம் கே.பி.

_41eca106-f290-11e6-bee8-7b74d3637aa8.jpg

நாடகத்தில் “சார் போஸ்ட்” என்ற வசனத்தைத் தவிர வேறு எதையும் நாகேஷ் பேசவில்லை. ஆனால் மேடைக்கு வந்தவுடன் கையிலிருந்த போஸ்ட்மேன் பையை வைத்து ஒரு காமெடி செய்தாராம் நாகேஷ். அவ்வளவுதான், மக்கள் எல்லோரும் “நாகேஷ் நாகேஷ்” என்று சத்தம் போடத் தொடங்கி விட்டனராம். “இதுக்குத்தான் நீ வேண்டாம்னு சொன்னேன்” என்று நாகேஷிடம் சத்தம் போட்ட கே.பி நாகேஷிற்காக ஒரு நாடகத்தை எழுத ஒப்புக்கொண்டாராம்.

5555.jpg

“சார்லி சாப்ளின் மாதிரி சோகம் கலந்த ஒரு நகைச்சுவை நாடகம் தான் உனக்கு சரியாக இருக்கும்” என்று பாலச்சந்தர் நாகேஷிடம் சொன்ன அடுத்த நொடி “அதான் ஐடியா கிடைச்சிடுச்சில்ல. உட்கார்ந்து கிடுகிடுன்னு நாடகத்தை எழுதி முடிச்சிடேன்”, ”நாளைக்குள்ள எழுதி முடிச்சிடுவியா” என்று நாகேஷ் கேட்டபோது பாலச்சந்தருக்கு சிரிப்பு தாங்கவில்லையாம். “முழு நாடகத்தையும் ஒரே நாளில் எப்படி எழுதி முடிப்பது? என்ற பாலச்சந்தர் அடுத்த சில நாட்களில் அந்த நாடகத்தின் கதாநாயகன் ஒரு ஹோட்டல் சர்வர் என்று முடிவு செய்து கொண்டு, நாடகத்தை எழுதி முடித்தாராம். பிறகு “சர்வர் சுந்தரம்” என்ற பெயரும் அந்த நாடகத்திற்கு வைக்கப்பட்டதாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top