Timeless

பார்ப்பதற்கே பயமுறுத்தும் விசித்திரமான உருவம் கொண்ட இதைப்பற்றி கேள்விப்பட்டதுண்டா ? கண்டிப்பாக இது ஏலியன் இருப்பிடம் அல்ல

Apr 02 2021 08:12:00 PM

உலகத்தில் நாம் தெரிந்து கொள்ளாத பல்வேறு ரகசியங்கள் இன்னும் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்க நாட்டில் சவுத் கரோலினா பகுதியில் உள்ள இந்த ஏன்ஜெல் ஓக் மரம் மிக பிரம்மாண்டமாக காண்போரை திகிலூட்டும் வகையில் மிரட்டலாக தோற்றமளிக்கிறது.

angel-tree

இந்த மரத்தின் வயது சுமார் 1500 ஆண்டுகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமாக காணப்படும் இந்த மரம் தற்போது பூமியில் இருக்கும் மிக வயதான மரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 65 அடி உயரம் கொண்ட இந்த மரமானது 25 அடிவரை சுற்றளவு கொண்டுள்ளது. இந்த மரத்தின் நிழலானது 1700 சதுர அடி வரை விரிந்து காணப்படுகிறது.

angel-tree

இந்த மரத்திலுள்ள ஒரு கிளை மட்டும் சுமார் 89 அடி நீளமாக இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அமைந்துள்ள ஏன்ஜெல் ஓக் மரம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. இந்த மரம் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக பரந்து விரிந்து காணப்படுவதால் ஒரு நிமிடம் அனைவரும் திகைத்து போகின்றனர்.