சக்கலத்தி பிரச்சினையை சுலபமாக முடித்த கென்யா வாலிபர்!
  • 12:27PM Dec 14,2018 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:27PM Dec 14,2018 Chennai

காதல் எந்த வயதிலும் வரலாம்..ஏன் திருமணம் ஆகிய பின்னும் வரலாம் இல்லை காதலிக்கும் போதும் வேறு ஒரு பெண் மீதும் வரலாம். ஆனால் இரண்டு பெண்கள் மீது ஒரே நேரத்தில் காதல் வந்தால் என்ன செய்வது? அவர்களுக்குள் சக்கலத்தி பிரச்சினை வராமல் எப்படி இருவரையும் சமாளிப்பது? பிரச்சனை இல்லாமல் எப்படி இருவரையும் திருமணம் செய்வது? இந்தக் கேள்விகளுக்கு கென்யாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் காதலித்த இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து பதிலளித்துள்ளார். அந்த இளைஞரின் பெயர் Tom Junior Mako. இவர் Elizabeth Simaloi மற்றும் Joyce Tikoiyan என்ற இரண்டு பெண்களை காதலித்து வந்தார். கென்யாவில் உள்ள காஜியாதோ பகுதியில் இவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த இரண்டு பெண்கள் மீதும் Mako-வின் சற்றும் ஏற்றக்குறைவு இல்லாமல் இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக இவர் சம்பாதிக்கும் பணத்தை இவர்கள் இருவருக்கும் சமமாக செலவிட்டு வந்தார்.

அவர்கள் இருவருக்கும் பிரச்சனை இல்லை என்று தெரிந்ததுமே அவர்களிடம் திருமணம் பற்றிப் பேசியுள்ளார். அந்த இருபெண்களும் Mako மீது அபரிவிதமான நம்பிக்கை வைத்திருந்ததால் Mako-வின் திருமண யோசனைக்கு எந்த கருது வேறுபாடும் இன்றி ஒப்புக்கொண்டனர். இவர்களின் சம்மதத்துடன் அந்த இரண்டு பெண்களையும் Mako ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் இந்த முடிவுக்கு Mako-வின் உறவினர்கள் அனைவரும் வாழ்த்தியுள்ளனர். இவர்களின் திருமணம் காஜியாதோ பகுதியில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top