#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி! எந்த மாநிலத்தில் தெரியுமா?
  • 17:39PM Jul 16,2019 Gujarat
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:39PM Jul 16,2019 Gujarat

எப்போதும் காப்பி அடித்தல் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே ஆசிரியர்களிடம் சிக்குவார்கள். பிட் அடிப்பது, பேப்பர் மாற்றி எழுதுவது போன்றவற்றைச் செய்தலும் மிஞ்சிப்போனால் 5 மாணவர்கள் மாட்டுவார்கள். ஆனால் 959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே கேள்விகளுக்கு விடை எழுதி, அதுவும் ஒரேமாதிரி விடை எழுதி, ஒரே வரியில் பிழை செய்து, அனைவரும் அச்சு அடித்தது போலக் காப்பி அடித்துள்ளனர் என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் இப்படி ஒரு சம்பவம் நமது நாட்டில் நடந்துள்ளது.

அண்மையில் குஜராத்தில் நடந்த 12-ம் வகுப்புத் தேர்வில் இந்தச் சரித்திரம் படைக்கும் காப்பி அடித்த சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் கல்வி ஆணையம் (GSHSEB) பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதற்காக அண்மையில் நடந்த பொதுத் தேர்வுகளின் விடைத்தாள்களைச் சோதித்துள்ளனர். இதில் 959 மாணவர்கள் ஒரேமாதிரி விடை எழுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் 200 மாணவர்கள் "Dikri Ghar Ni Divdi" என்ற கட்டுரையை முன்னிலை முதல் முடிவுரை வரை ஒன்றுபோலவே எழுதியுள்ளனர்.

Image result for indian school exams

Actor Suriya About New Education Scheme

இந்தக் காப்பி அடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகளை 2020-ம் ஆண்டு வரை குஜராத்தின் கல்வி ஆணையம் (GSHSEB) நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல அந்த மாணவர்கள் காப்பி அடித்த பாடங்களில் பெயில் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதில் Junagadh மற்றும் Gir-Somnath பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம் காப்பி நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் சில மாணவர்களை அழைத்து விசாரித்தபோது, தேர்வு நடந்த இடங்களில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு வினா கூறியதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு குஜராத் மாநிலத்தில் வெளியான தேர்வு முடிவில் 63 பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் பெயில் ஆகியது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top