#90skid: 90களின் குழந்தையாக நீங்கள் இந்த பொய்களை எல்லாம் நம்பியுள்ளீர்களா? இந்த லிஸ்டில் நீங்க நம்பிய பொய் என்ன??
  • 17:38PM Oct 14,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 17:38PM Oct 14,2019 Chennai

90களின் குழந்தைகளின் பொய்க்கும் கற்பனை திறனுக்கும் எல்லையே இல்லை.அவற்றுள் சில வேடிக்கையானவை இந்த பதிவில்,    

#1. ஆபத்து என்றால் காப்பாற்ற கண்டிப்பாக சக்திமான் வருவார்.வாரத்தில் ஒருமுறை ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்க்க,டிவி இருக்கும் ஒரே வீட்டில் கும்பலாக அந்த தெரு குழந்தைகள் முழுக்க நிரம்பியிருப்பார்கள். இப்போது உயிரை பறிக்கும் ப்ளூ வேல் கேமிற்கும், வன்முறையை தூண்டும் பப்ஜி கேமிற்கும் சக்திமான் எவ்வளவோ பரவாயில்லை.

#2. WWE போட்டியில் அண்டர் டாக்கர் என ஒருத்தன் இருப்பான்,அவனுக்கு சாவே கிடையாது.சொல்லப்போனால் அவருக்கு 7 உயிர் இருக்குனு நண்பர் கூறியதை அப்படியே ஊருக்கு பரப்பும் பாக்கியம் கிடைத்தது.

#3. சைட் அடித்தால் முகத்தில் பருவரும் என தோழிகள் கூறியது..இப்போதைய தலைமுறையிலும் இருக்கும் பசுமை மாறா பொய்.. வசந்த காலத்தின் வருகையை உணர்த்திய தருணம். 

#4. மயில் இறகை புத்தகம் நடுவில் வைத்தால் அது குட்டிபோடும் என சொல்லிவைத்த பொய். 

#5. இரயில் வரும் முன் தண்டவாளத்தில் காசை வைத்தால் அது உடனே காந்தமாக மாறும் என யாரோ சொன்னதை வைத்து பல முறை செய்த முயற்சி.தேடிப்பார்த்தால் இறுதிவரை நாணயம் கிடைக்காது.  

#6. விதையுடன்  பழம் முழுங்கிவிட்டால் வயிற்றிலிருந்து செடி முளைத்து கொஞ்ச நாளில் தலை வழியாக மரமாக வரும் என யாரோ கிளப்பிவிட்ட விளையாட்டு.

#7. தலையோடு தலை முட்டிக்கொண்டால்  மீண்டும் முட்டிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கொம்பு வந்து மிருகமாக மாறிடுவோம்..!! 

#8. சிலந்தி  கடித்தால் நமக்கும் அபூர்வ சக்தி கிடைத்து ஸ்பைடர் மேன் ஆகி விடுவோம் என்று நம்பினேன்.

#9. தோளில் கை போட்டால் குள்ளமாகி விடுவோம் என நம்பி யாரையும் தோள் மேல் கைவைக்க விடாமல் பார்த்துக்கொண்ட தருணம். 

#10. நிஜமாகவே  நிலவில் பாட்டி வடை சுடுகிறார் என் நம்பி தினமும் நிலவில் பாட்டியை தேடிய காலங்கள்..

#90skid, மேற்கண்ட அனைத்தும் குழந்தைகள் அறிவியலை அறிய முற்படும் போது இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என எண்ணியதன் விளைவாக தோன்றியவை.உதாரணத்திற்க்கு   விதையுடன்  பழம் முழுங்கிவிட்டால் வயிற்றிலிருந்து செடி முளைத்து கொஞ்ச நாளில் தலை வழியாக மரமாக வரும் என கூறியது எல்லாம் மண்ணில் விதை போட்டு தண்ணீர் ஊற்றினால்  மரமாகும்,வயிற்றிலும் செடி முளைத்து தலை வழியாக வந்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பின் உச்சம்.இவை எல்லாம் கற்பனைக்கு எல்லை இல்லை என்பதை உணர்த்திய அழகான விஷயங்கள். இப்போதை குழந்தைகளுக்கு கற்பனை செய்ய ஏது நேரம், யோகா கிளாஸ்,டான்ஸ் கிளாஸ் என எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள்.இந்த அற்புதமான பாக்கியம் அமையப்பெற்றவர்கள் 90ஸ் குழந்தைகள் நாமே...!! #thala: பீச்சில் மகனுடன் கொஞ்சி விளையாடும் தல! வைரல் புகைப்படம் உள்ளே!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top