Highrise

#90s kids games: மறந்து போன விளையாட்டுகள்? உடலுக்கும் மனதுக்கும் தெம்பு தரும் இவை எங்கே தொலைந்து போனது?

May 11 2019 12:36:00 PM

90s kids அனுபவித்தவற்றை இக்கால குழந்தைகள் அறிந்திருப்பதுவே அரிதாக உள்ளது.உதாரணத்திற்க்கு ஆறு , குளம்,குட்டைகளில் குளித்தது, இப்போது அரிதாக கிடைக்கும் நுங்கு,கொடிக்காய் போன்றவற்றை கூறலாம்.அந்தவகையில் நாம் மறந்து போன , இந்த கால குழந்தைகள் என்ன வென்றே அறியாத ஒரு சில விளையாட்டுக்கள்,

பச்சை குதிரை, ஒருவர் குனிந்திருக்க அந்த நபர் மீது ஏறி குதிப்பது. இதை விளையாடும் போது, காலின் குதிகள் வலுப்பெறும்.உடற் கழிவுகள் வெளியேறும்.எச்சரிக்கை எண்ணம் விளையாட்டு முடியும் வரை இருக்கும்.. உயரம் குறைவாக இருப்பவர்கள் தொடர்ச்சியாக விளையாடும் போது உயரம் கூடும் ..

கட்டைக்கால் விளையாட்டு , கால்களில் மரக்கட்டைகளை கட்டிக்கொண்டு நடப்பது..இதனால் கை ,கால்கள் வலுப்பெறும்..கழுத்து நேராகும். கூன் விழுவது தவிர்க்கப்படும்.அடுத்து கிட்டிப்புள், குறிப்பார்க்கும் திறன் கூடும்.நுண்ணிப்பாக ஒரு செயலை கவனிக்கும் திறன் வளரும்.அளவீட்டு கணிதமுறை ப்ராக்டிகலாக விளங்கும்.கைகள் வலுவாகும்..

கயிறிழுத்தல், தாக்கு பிடிக்கும் தன்மை கூடும்..குழுவோடு பணியாற்றும் பண்பு வளரும்.கால்களின் நிலைப்பு தன்மை அதிகமாகும். பல்லாங்குழி, கணித திறன் மேம்படும்,சேமிப்பின் முக்கியத்துவம் புரியும்.விளையாட்டு போக்கிலே வணிகத்தை கற்றுக்கொள்கிறார்கள்..எழுகல் எறிபந்து, குழுவின் முக்கியத்தும் புரியும்.குறிபார்க்கும் திறன் கூடும்.. தாயம், வாழ்வின் அடிப்படை என்ன என்பது விளங்கும்.கணித நுட்பம் கூடும். உந்திப்புற, கை கால்கள் நீட்சியடையும்..மூச்சு மண்டலம் தூய்மையாகும்.

இன்னும் எத்தனையோ விளையாட்டுக்களை விளையாடியிருப்போம்.. இந்த கால குழந்தைகளுக்கு விளையாட்டை கூட வியாபார நோக்கில் போதிக்கின்றனர். அரசு வேலைக்கு இடம் ஒதுக்கீடு கிடைக்கும் விளையாட்டு, சமூக அந்தஸ்து கொடுக்கும் விளையாட்டை தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆர்வமூட்டுகின்றனர்..இங்கு ஆர்வம் கூட ஆர்டிபிசியலாக தான் வருகிறது.