#90s Kids: இதெல்லாம் நினைவு இருக்கிறதா? மறக்க முடியாத விளம்பரங்கள்
  • 17:22PM Apr 19,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 17:22PM Apr 19,2019 Chennai

90s Kids நினைவுகளில், அன்று வெளியான விளம்பரங்களை மறக்கவே முடியாது..இப்போதும் கிராமத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் அந்த விளம்பரங்ளை பார்க்க முடியும். 90s இல் வெளியான விளம்பரங்களில் இன்று பல காணாமல் போய்விட்டது..ஒரு சில ப்ராடக்டுகள் மட்டுமே பல போட்டிகளை தாண்டி இன்றும் தாக்கு பிடித்து கொண்டிருக்கிறது.அவற்றுள் சில,Harris Jayaraj Music இல் Coca Cola விளம்பரத்தில் Vijay நடித்திருப்பார்.அப்போது வெளியான இந்த கோக் விளம்பர பாட்டை பாடாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து விஜய் 3 கோக் விளம்பரங்களில் நடித்திருப்பார்.அன்றைய தினம் கோக் 5 ரூபாய்தான்.

அடுத்து எல்லோருக்கும் பிடித்தமான Nescafe sunrise விளம்பரம்,இதில் தல, சிம்ரனிடம் எப்படி தன்னுடைய காதலை சொல்வதென தெரியாமல் குழம்பி இருக்கும் நேரத்தில் ஒரு காபி ஷாப்பில் sunrise குடித்து கொண்டிருப்பார்.அப்போது வந்த ஐடியாவில் சிம்ரனிடன் propose செய்வார். சிம்ரனும் ஓகே சொல்லிடுவார்.இந்த விளம்பரத்தில் "முழிச்சுக்கோ சன்ரைஸ் குடிச்சுக்கோ" எனும் டயலாக் செமவைரல்.

மீரா ஷாம்புவை நாம் கேள்விப்பட்டிருப்போம்.இந்த விளம்பரத்தில் "வெள்ளிக்கிழமை..." என தொடங்கும் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. தொழில்முறை போட்டிகளை கடந்து இன்றும் தாக்கு பிடித்து நிற்கிறது மீரா..

Parle G Glucose Biscuit, 90s -இல் பிறந்தவர்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம், அப்போது best snacks ஆஹ இருந்த ஒன்று.ஸ்கூல் snack box இல் முக்கிய இடம் பிடித்த ஒன்றும் கூட..

அப்போது இருந்த பல பொருட்கள் இன்று காணாமல் போய்விட்டது.அப்போதைய பொருட்களின் தரம் இப்போதும் இருக்கிறதா என்பதும் பெரிய கேள்விக்குறியே?விளம்பரங்கள் வாயிலாக பிராண்டுகளை முன்னிலைப்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்றதும் 90s இல்தான்.

Top