Shoreline

இவ்வளவு பெரிய பெயர் வைத்தால் அதை படிப்பதற்கே ஆறு மாசம் ஆகுமே! எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ?

May 04 2021 05:59:00 PM

பொதுவாக ஒரு இடத்தின் பெயரோ அல்லது ஊரின் பெயரோ ஐந்து, பத்து அல்லது ஒரு பதினைந்து எழுத்துக்களில் அடங்கி விடும். பத்து எழுத்துக்களுக்கு மேல் இருந்தாலே என்னப்பா இவ்வளவு பெரிய பெயரா என்று அனைவரும் கேட்பார்கள். உதாரணமாக நம்ம தமிழ்நாட்டில் சில ஊர் பெயர்களை பாருங்கள்.

85letter-hills

கோபிசெட்டிபாளையம் இதை ஆங்கிலத்தில் எழுதினால் 15 எழுத்துக்களுக்கு மேல் வரும். இதை சுருக்கமாக நாம் கோபி என்று அழைப்போம். சத்தியமங்கலம் என்பது மிகப்பெரிய பெயரில்லை. இருந்தாலும் சுருக்கி சத்தி என்று கூறுவதை பார்த்திருக்கிறோம். கோயம்புத்தூர் என்பதை சுருக்கி கோவை என்றழைக்கிறோம். இப்படி ஓரளவிற்கு சிறிய பெயர்களையே பெரிதாக இருக்கிறது என்று நம்ம ஊரில் சுருக்கி அழைத்து வருகிறோம். ஆனால் இந்த இடத்தில் வாயிலே நுழையாத அளவுக்கு பெரிதாக ஒரு பெயரை வைத்துள்ளனர்.

85letter-hills

நியூசிலாந்து நாட்டில் போரங்கஹா என்ற இடத்துக்கு அருகில் ஒரு மலைச்சிகரம் அமைந்துள்ளது. அந்த மலைச்சிகரத்துக்கு 85 எழுத்துகளை கொண்ட பிரம்மாண்ட பெயரை வைத்துள்ளார்கள். உலகிலேயே மிகப்பெரிய பெயரை கொண்ட இடம் என்று இதை கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வளவு பெரிய பெயரை சொல்லி எப்படி கூப்பிடுவது என்பதே வேடிக்கையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. இதை முதலில் எப்படி உச்சரிப்பது என்பதை நினைத்தாலே நாக்கு தள்ளிவிடும்.