PUBG விளையாட்டால் பைத்தியமான ஜிம் பாய்! பதற்றத்தில் பெற்றோர்!
  • 12:20PM Jan 11,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:20PM Jan 11,2019 Chennai

தற்போது எந்த வாலிபரின் மொபைலை எடுத்துப் பார்த்தாலும் அதில் PUBG கேம் நிச்சயம் இருக்கும். இளைஞர்கள் ஒரு நாளிற்குக் குறைந்தது 4, 5 மணி நேரத்தை இந்த PUBG விளையாட்டில் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. சாதாரண விளையாட்டு தானே என்று நாம் நினைப்போம், ஆனால் இந்த விளையாட்டால் இதுவரை 6 பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? ஜம்முவில் மட்டும் இதுவரை 5 பேர் PUBG விளையாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்பு தான் 6-வதாக ஒரு வாலிபர் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜம்முவில் ஜிம் வைத்திருக்கும் இந்த வாலிபர், PUBG விளையாட்டை 10 நாட்களுக்கு முன்பு தான் விளையாடத் தொடங்கினர். ஆனால் அதற்குள் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டார். ஒரு ரவுண்டு முடிந்ததும், தன்னை தானே அடித்துக்கொண்டுள்ளார். இதைப் பார்த்து பதறிய பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், PUBG விளையாட்டால் அந்த வாலிபர் மன சமநிலை இழந்ததைத் தெரிவித்துள்ளனர். அந்த வாலிபரால் ஆட்களை அடையாளம் காணமுடிந்தாலும், அவரால் PUBG விளையாட்டை விட்டு வேறு எதுவும் யோசிக்கமுடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்னும் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்புவார் என்றும் கூறியுள்ளனர். ஜம்முவில் உள்ள மக்கள் இந்த PUBG விளையாட்டால் பதற்றத்தில் உள்ளனர். இந்த விளையாட்டை ஜம்முவில் தடை செய்யவேண்டும் என்று புகார் அளித்தும் வருகின்றனர்.

Related image

Share This Story

You Might Also Like These
Related Stories
Top