#Asuran "புள்ள போனபிறகு, கௌரவத்த வச்சி என்ன பண்ண?" ஒற்றுமையைப் போற்றும் அசுரன் திரைப்படத்தின் 5 முக்கிய வசனங்கள்!
  • 19:48PM Oct 11,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 19:48PM Oct 11,2019 Chennai

சமீபகாலமாகத் தமிழ் திரையுலகில் சாதிய பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அருமையான கதையம்சம் மற்றும் வசனங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் திரைப்படங்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சுற்றி அமைக்கப்படும் கதைக்களமாக இல்லாமல் ஒவ்வொரு மனிதனும் சமஉரிமை பற்றித் தெரிந்துகொள்ள உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகியுள்ள "அசுரன்" திரைப்படம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. தந்தை பாசம், நிலஉரிமை, சாதிய வேற்றுமை என இந்தத் திரைப்படத்தில் அனைத்தும் ஒன்று சேர கதைக்களமாக அமைந்துள்ளது.

#thalaajith: இதை விட அழகாக காதலை கூற முடியுமா? ஷாலினிக்கு வித்தியாசமான ப்ரோபோசலை கொடுத்த அஜித்! இப்படியெல்லாம் இம்ப்ரெஸ் செய்துள்ளாரா!

பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம் பெரும் கதாபாத்திரங்கள் ஓரிரு நாட்கள் கடந்தும் நம்முடன் பயணிக்கிறது என்றால் அந்தத் திரைப்படம் நிமிடம் ஒரு நல்ல எண்ணத்தை விதைத்துள்ளது என்று அர்த்தம். இதற்கு அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும் முக்கியக் காரணங்களாகும். அந்த வகையில் "அசுரன்" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் குறித்து இங்குப் பார்ப்போம். தமிழகத்தில் கவுரவக் கொலைகள் குறித்து வருடத்திற்கு ஒரு செய்தி வெளியாகிறது. பெற்ற குழந்தைகளைக் கௌரவத்திற்காகக் கொல்ல முயலும் தந்தைகளுக்கு நேரடி கேள்வியாக "புள்ள போனபிறகு, கௌரவத்த வச்சி என்ன பண்ண?" என்று இடம்பெற்றுள்ள வசனம் சிந்திக்கவைக்கிறது. தமிழகச் சமூகங்கள் பலவற்றில் பகை என்னும் ஒற்றைக் காரணத்தால் மட்டுமே ஏகப்பட்ட குடும்பங்கள் நிர்கதியில் நின்றுள்ளது. அற்ப காரணங்களுக்காக இரு சமூகத்தினரிடம் ஏற்படும் பிரச்சனைகள் கலவரமாகவும் மாறியுள்ளது. இதனை எதிர்க்கும் வகையில், "பகைய வளர்க்க நெனைக்காத, கடக்கப் பழகிக்க" என்று தனுஷ் கூறும் வசனம் பாராட்டக்குடியது!

திரைப்படத்தின் பிளஷ்பக் கதையில், தனுஷின் முறை பெண்ணாக வரும் அம்மு அபிராமி, "என்ன அடிக்குறதுல அவங்களுக்கு என்ன பெருமை மாமா", "அவன் என்ன செருப்ப தலையில வச்சி நடக்கச் சொல்லி அடிச்சது கூட வலிக்கல, ஆனா அத இந்த ஊர்ல இருந்த எல்லாரும் எதுவும் கேட்காம வேடிக்கை மட்டும் பார்த்திட்டு இருந்தது தான் தாங்கமுடில" என்று அழுதுகொண்டே கூறும் வசனங்கள் பார்ப்பவரை இந்தச் சமூகத்தின் மீது ஆத்திரப்படவும், அழவும் வைக்கிறது. இறுதியாக, " நம்மகிட்ட காடு இருந்த எடுத்திக்கிடுவானுங்க, ரூவா இருந்த புடிங்கிடுவானுங்க, படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது" என்று தனுஷ் கூறும் வசனம் படிப்பின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எளிமையாகப் புரியவைக்கிறது. கமர்சியல் திரைப்படங்களிடையே மக்களின் மனதில் சமத்துவத்தை ஏற்படுத்த நினைக்கும் "அசுரன்" போன்ற திரைப்படங்கள் மேலும் பல வெளியாக மனம் ஏங்குகிறது!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top