#5 Best Movies of Sivakarthikeyan : இதெல்லாம் தான் டாப்பு டக்கரு! imdb-யே சொல்லியிருக்காங்க பாருங்க !
  • 18:15PM Apr 27,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 18:15PM Apr 27,2019 Tamil Nadu

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த பிறகு குழந்தைகளுக்கு பிடித்த பிரபலமாக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார். 'ஊதா கலரு ரிப்பன்' பாடல் ஒன்றின் மூலமாகவே பல பிஞ்சுகளின் உள்ளதை கொள்ளை கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்து, திறமையை மெல்ல மெல்ல வெளிகாட்டி இன்றைக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நாயகனாக உருவெடுத்திருக்கிறார். போராட்டங்களை கடந்து, உச்சத்தை அடைந்த சிவகார்த்திகேயனை கை தூக்கி விட்டது ஒரு சில படங்களே. அவற்றின் மூலமாகவே மற்ற பட வாய்ப்புகளும் வரிசையாக வந்து, உற்று நோக்கப்படும் கதாநாயகனாக உருவெடுத்தார்.

#1. வேலைக்காரன் (Velaikkaran) - 2017 ஆம் ஆண்டில் வெளிவந்தது இந்த படம். மக்களை ஏமாற்றும் நிறுவனங்களுக்கும், அதில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள விசுவாசத்தை அருமையாக விளக்கும் படம்.

#2. எதிர் நீச்சல் (Ethir Neechal) - 2013 ஆம் ஆண்டில் வெளிவந்தது இந்த படம். சாதாரண ஒரு சாமானியனாக இருக்கும் ஒருவர். மாரத்தான் ஓட்டபந்தயத்தில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை கதை களமாக கொண்டது.

#3. வருத்தப்படாத வாலிபர் சங்கம் (Varuthapadatha Valibar Sangam) - 2013 ஆம் ஆண்டில் வெளியானது இந்த திரைப்படம். படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது என்பதால், அனைத்து தரப்பு மக்களிடத்திலும் வரவேற்பை பெற்றது.

#4. ரஜினி முருகன் (Rajini Murugan) - 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படம். இதில் சூரியுடன், இணைந்து நடித்த காமெடிகள் பிரபலமடைந்ததால் படமும் மிகப்பெரிய அளவிலான வெற்றி பெற்றது.

#5. ரெமோ (Remo) - 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம். சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த முதல் படம் என்பதால், கமெடியோடு, காதலும் சேர்ந்த கலவை வெற்றியை தேடி கொடுத்தது.

#5 Best Movies of Sivakarthikeyan : இவை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான முதல் 5 சிறந்த படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இவற்றின் வெற்றியை தொடர்ந்தே சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Top