முடிவிற்கு வந்தது 400 ஆண்டுகால சாபம் - MYTHS OF MYSORE
  • 08:47AM Dec 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 08:47AM Dec 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

பெங்களூரு: மைசூர் மன்னர் யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியாருக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளதின் மூலம்  400 ஆண்டுக்கால சாபம் முடிவடைந்து.

1612 ஆம் ஆண்டு விஜயநகர சமஸ்தானத்தைச் சேர்ந்த திருமலைராஜாவிடம் இருந்து ராஜா உடையார் என்பவர் ஆட்சியைக் கைப்பற்றினார். திருமலைராஜாவின் மனைவியான அலமேலம்மா என்பவர் அரசு நகைகளுடன் தப்பி சென்றார்.அவரைக் காவலர்கள் பின் தொடர்ந்து வருவதை அறிந்து

"தலக்காடு மண்ணாகப் போகட்டும்; காவிரியில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும்; மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்"

          என்று சாபமளித்து காவேரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இந்தச் சாபம் பலிக்குமோ என்று பல சந்தேகங்கள் எழுந்தது.அதை நிரூபிக்கும் வகையில் கடந்த 400 ஆண்டுகளில் அரச குடும்பத்திற்கு இன்று வரை நேரடி ஆண் வாரிசு கிடையாது.

இந்நிலையில் தற்போது மன்னராக முடிசூட்டப்பட்டுள்ள யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியாருக்கும் ராஜ்காட் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷிகா குமாரி சிங்க்  அவர்களுக்கும் கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது.

இந்நிலையில், நேற்று இரவு பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையில்  திரிஷிகாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.இந்தக் குழந்தையின் மூலம் 400 ஆண்டுக்கால சாபம் இன்றோடு முடிவிற்கு வந்துள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top