#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ!
  • 16:44PM Sep 14,2019 Florida
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:44PM Sep 14,2019 Florida

கடந்த வாரம் பஹாமாஸ் நாட்டில் கடுமையான சூறாவளி ஏற்பட்டு நாடே சோகத்தில் முழுகியுள்ளது. உலகின் மிகமுக்கியமான சுற்றுலாதளத்தில் இப்படி ஒரு சூறாவளியை சந்தித்ததில்லை என்று அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுலா வந்தவர்கள் உட்பட இந்தச் சூறாவளியில் 50-க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பஹாமாஸ் சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனை அவனது வகுப்பு நண்பர்கள் கட்டித்தழுவி நலம் விசாரித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

3-year-old who survived Hurricane Dorian embraced by classmates

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவன் Makai என்ற சிறுவன். இந்த மாதம் பஹாமாஸில் சூறாவளி ஏற்பட்டபோது அங்கு Makai தனது குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டுள்ளான். இந்நிலையில் அங்குச் சூறாவளி ஏற்பட்டது குறித்து அவனது வகுப்பு நண்பர்கள் மிகவும் கவலைப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து திரும்பிவந்த Makai தனது பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அவனது வகுப்பு நண்பர்கள் அனைவரும் அவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top