#Tamil Cinema : 2019 -திரையுலகிலிருந்து விண்ணுலகிற்கு சென்றவர்கள் !!!
  • 13:39PM Apr 03,2020 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 13:39PM Apr 03,2020 Tamil Nadu

இந்த  ஆண்டில் (2019)  தமிழ் திரையுலகில்   பல வெற்றி திரைப்படங்கள் உலகளவில் பிரபலமானாலும் சில திரையுலக பிரபலங்களின் எதிர்பாராத இழப்புகளையும் சந்தித்துள்ளது.அப்படி இந்தாண்டு திரையுலகிலிருந்து விண்ணுலகிற்கு சென்ற பிரபலங்கள் யார் என்பதை நினைவுகூறவே இந்த பதிவு.முதலில் இயக்குனர் ஜெ.மகேந்திரன்:தமிழ் சினிமாவில்  முள்ளும் மலரும் என்ற காலத்தால்அழிக்க முடியாத உன்னத படத்தை  தந்த  இயக்குநர் தான் இவர் ,இவரை இளைய தளபதி விஜயின் தெறி படத்தின் வில்லன் என்றால் தான் இப்பொழுதுள்ள தலைமுறைக்கு தெரியும் .உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் ,கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இவரது மரணம் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.

Mahendran.jpeg

இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் MP யும் நடிகருமான ஜே.கே.ரிதீஷ் என்கிற முகவை குமார் : தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.இவர் அரசியல் பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்டு ,அதன் பிறகு தனது வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி விண்ணுலகையடைந்தார்.கிரேசி மோகன்  இந்த பெயரை தமிழ் திரையுலகில் மட்டுமில்லை  ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்,ஐவரும் இந்தாண்டு     ஜூன் மாதம் 10 ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

crazymohan.jpg

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளியான காதலன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் கிரிஷ் கர்னாட்  கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் .நிழல்கள் என்ற படத்தின் மூலமாக அறிமுகமான   நிழல்கள் ராஜசேகர்   இவர்  சின்னத்திரையில் வெளியான சில பிரபலமான தொடர்களிலும் நடித்துள்ளார் .இவர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

dea.jpg

பல படங்களில் வில்லனாகவும் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் பாலாசிங் தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன இந்தியன், சாமி மற்றும் தனுஷின் புதுப்பேட்டை  போன்ற படங்களில் நடித்துள்ளார் .இவர் திடீரென்று இரவில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .பிறகு  கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top