Timeless

தேதி பாக்கறதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா.? வரலாற்றை புரட்டி போடும் calendar.!

Oct 08 2018 05:14:06 AM

your image

 

நேரத்தைக் கணக்கிடல் என்பது சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது புதிய கற்காலத்திலேயே தொடங்கிவிட்டது. எழுத்துகளின் உருவாக்கத்தைத் தொடர்ந்து, வெண்கலக் காலத்தில் (சுமார் கி.மு.3000) நாட்காட்டிகள் உருவாகிவிட்டன.

கி.மு. 3761 ஆம் ஆண்டு யூதர்களின் நாட்காட்டியான ஹீப்ரூ நாட்காட்டி, நேற்றைய தேதியிலிருந்துதான் கணக்கிடப்படுகிறது. உலகின் மிகப் பழைமையான நாட்காட்டிளுள் இதுவும் ஒன்று.

உலகின் மிக மூத்த நாட்காட்டியாக சுமேரிய நாட்காட்டியும், அதைத் தொடர்ந்து எகிப்திய, அசிரிய,எலாமைட் ஆகிய நாட்காட்டிகள் குறிப்பிடப்படுகின்றன.

இரும்புக் காலத்தில், அசிரிய, பாபிலோனிய நாட்காட்டிகளின் அடிப்படையில் உருவான பாரசீக நாட்காட்டியிலிருந்து உருவானது ஹீப்ரூ நாட்காட்டி. பண்டைய நாட்காட்டிகள் அனைத்தும், இரவு-பகல் நேரத்தையொட்டி நாளையும், சந்திரனின் அடிப்படையில் மாதத்தையும், சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் ஆண்டையும் கணக்கிடும் சந்திர-சூரிய நாட்காட்டிகளாகவே இருந்தன.

சந்திரனின் இயக்கத்திற்குத் தொடர்பில்லாத நாட்காட்டியை ஜூலியஸ் சீசர்தான் (ஜூலியன் நாட்காட்டி) கி.மு.45இல் உருவாக்கினார். இதன் குறைபாடுகள் களையப்பட்ட தற்போதைய நாட்காட்டி 1582இல் திருத்தந்தை 13ஆம் கிரிகோரியால் உருவாக்கப்பட்டது.

ரோமப் பேரரசின் நாட்காட்டியில், மாதத்தின் முதல் நாள் காலெண்ட்ஸ் என்று அழைக்கப்பட்டதிலிருந்து காலெண்டர் என்ற பெயர் உருவானது. லத்தீன் மொழியில் காலெண்டரியம் என்றால் கணக்குப் பதிவேடு என்று பொருள்.

ஹீப்ரூ நாட்காட்டியில், சூரியன் மறையும்போது நாள் தொடங்கும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு, அமாவாசையன்று தொடங்கும் 12 மாதங்களைக் கொண்டிருப்பதால், சூரிய ஆண்டிற்குச் சரி செய்வதற்காக 2 அல்லது 3 ஆண்டுகளுக்கொருமுறை (19 ஆண்டுகளுக்கு 7 முறை என்ற விகிதத்தில்), கூடுதல் மாதம் சேர்க்கப்படும்.

இஸ்ரேல் உருவானபோது, அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டிகளாக ஹீப்ரூ, கிரிகோரியன் இரண்டும் ஏற்கப்பட்டன. தற்போது, ஹீப்ரூ நாட்காட்டி மதச் சடங்குகளுக்கும், விவசாயிகளின் பயிரிடும் காலக் கணக்கீடுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.