#ELECTIONCOMMISSION: 20 லட்சம் EVM MACHINE-கள் காணாமல் போன கதை!!! ECI சொல்லப் போகும் பதில் என்ன???
  • 19:26PM May 23,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:26PM May 23,2019 Chennai

ஓருவார கலமாக யாராலும் சட்டை செய்யப்படாத தகவல் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. அது, 20 லட்சம் EVM MACHINE-கள் காணாமல் போனதுதான். இது நிஜமா என்று விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் பல விஷயங்கள் தெரிய வந்துள்ளது. காரணம், 20 லட்சம் EVM-கள்தான் வாங்கினோம் என்று ECI - ELECTION COMMISSION OF INDIA ஆணித்தரமாகச் சொன்னாலும், EVM MACHINE தயாரித்துக் கொடுத்த இரண்டு நிறுவனங்கள் BEL – BHARATH ELECTRONICS LIMITED, BANGLORE மற்றும், ECIL – ELECTRONIC CORPORATION OF INDIA LIMITED, HYDERABAD ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து 40 லட்சம் EVM MACHINE-களைத் தயாரித்து வழங்கியதாகச் சொல்கிறார்கள்.

ஜனவரி, 2, 2018 தேதியிட்ட ஒரு RTI கேள்விக்கான பதிலில், BEL நிறுவனம் 1989-90-ல் ஆரம்பித்து, 2014-15 வரை 19,69,932 EVM MACHINE-களை ECI – ELECTION COMMISSION OF INDIA-வுக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தது. அதே போல, செப்டெம்பர் 16, 2017 தேதியிட்ட RTI கேள்விக்கான பதிலாக, இன்னொரு நிறுவனமான ECIL – 19,44,593 EVM MACHINE-கள் வழங்கப்பட்டதாகச் சொன்னது. அதே சமயம் மே 22, 2017 தேதியிட்ட RTI கேள்விக்கு ECI – இதுவரை தான் BEL-டம் 10,05,662 EVM MACHINE-களையும், ECIL நிறுவனத்திடமிருந்து 10,14,644 EVM MACHINE-களையும் வாங்கியதாகத் தெரிவித்துள்ளது.

இவர்கள் மூவரும் கூறிய தகவலின்படி, கிட்டத்தட்ட, 20 லட்சம் EVM MACHINE-கள் போன இடம் தெரியாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது ELECTION COMMISSION OF INDIA பொய்க் கணக்கு எழுதியதாகத்தான் கொள்ள முடியும். இந்த வழக்கு தற்போது BOMBAY HIGH COURT-டம் இருக்கிறது. நிஜமாகவே தயாரிக்கப்பட்டு, ECI அதை மறைத்திருக்குமானால், அதை விடப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்பது இருக்கவே முடியாது என்பது நிதர்சனமான உன்மை!!!    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top