#USA: காலர தூக்கி கெத்தா சொல்லுங்க நான் தமிழன்னு : அமெரிக்காவில் எதிரொலிக்கும் தமிழ் முழக்கம் - இன்று சிகாகோவில் தமிழ் வெள்ளம்.!
  • 11:54AM Jul 04,2019 Chicago
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:54AM Jul 04,2019 Chicago

பல வருடங்களுக்கு பிறகு 10-வது உலகத்தமிழ் மாநாடு அமெரிக்காவுல சிகாகோ நகரில் இன்னைக்கு (ஜூலை 4) தொடங்கி இருக்கு. ஜூலை 7 வரைக்கும் இந்த மாநாடு நடக்க போகுது. இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர்ன்னு பல நாடுகள்ல இருந்து, மொழியியல் அறிஞர்கள் கலந்துக்க போறாங்க. தமிழக அரசு சார்பா அமைச்சர் மாபா பாண்டியராஜன் போயிருக்காரு. இந்த மாநாட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ்சங்க பேரவை அப்புறம் சிகாகோ தமிழ் சங்கம் இணைந்து நடந்தறாங்க. எப்படியும் 25 கோடிக்கு மேல செலவு ஆகும்னு எதிர்பார்க்கப்படுது.

உலகம் முழுக்க இருந்து 2000 ஆய்வு கட்டுரைகள் இந்த மாநாட்டுக்காக பலரும் அனுப்பி இருந்தாங்க. அதுல தரமான 80 மட்டும் தான் தேர்வு செஞ்சு இருக்காங்க. மாநாடு முடிஞ்ச அப்புறம் அதெல்லாம் ஒரு புத்தகமா மாறப்போகுது. சுமார் 6000 பேர் வரைக்கும் 10-வது உலகத்தமிழ் மாநாட்டுல ( 10th World Tamil Conference) கலந்துக்குவாங்கன்னு எதிர்பார்க்கறாங்க. உலகத்தமிழ் மாநாடு மூன்று முறை தமிழ்நாட்டுல நடந்துருக்கு. மதுரை, சென்னை, தஞ்சாவூர்ன்னு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்ள நடத்தி இருக்காங்க. அதுக்கு அப்புறம் எல்லாமே வெளிநாட்டுல தான் நடந்துருக்கு. கடைசியா மலேசியாவுல 2015 ஆம் ஆண்டு நடந்துச்சு. அதுக்கு அப்புறம் இப்போ அமெரிக்கால சிகாகோல நடக்குது.

இதுவரைக்கும் உலகத்துல கண்டுபிடிச்ச6,000 மொழிகளில் வெறும் ஆறு மொழி  மட்டும் தான் செம்மொழி தகுதி பெற்று இருக்கு. கிரேக்கம், லத்தீன், எபிரேபியம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் இந்த மொழிகள் தான் அது. மேமொழி என்று சொல்லப்படுற ஒரு மொழி குறைந்தபட்சம் 2000 ஆண்டு கால பாரம்பரியம் இருக்கணும். அதுபோக இலக்கணம், இலக்கியம், கலை சொல்லும் நுட்பங்கள் இந்த மாதிரி சில மொழியியல் நுணுக்கம் எல்லாம் ஆதி காலம் முதலே இருந்திருக்கணும்.இந்த தகுதிகள் இருந்து, இப்போது கூட அழிந்து போகாமல் புழக்கத்தில் இருக்கும் தகுதி கொண்டதாக தமிழ் இருக்க ஒரே மொழி தமிழ் மட்டும் தான்.

ஒரு மொழி எவ்வளவு பழமையா இருந்தாலும், அது காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே கொண்டே வந்தால் மட்டுமே அழியாமல் இருக்குமாம். இப்போ அமெரிக்காவுல நடக்குற மாநாட்டுல நவீன மொழி ஆய்வுகள், தொல்லியல் ஆய்வுகள், சிற்பம், கட்டிடக் கலை, அறிவியல் சார்ந்த ஒப்பீடுகள் பற்றி பேசப்போறாங்க. கீழடி தொல்லியல் ஆய்வுகள், அதில் கிடைத்த 13,638 பழம் பொருட்கள் பற்றி முக்கியமா பேச போறாங்க. தொன்மையான தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் நவீன தமிழ் மற்றும் தமிழ் கலாசாரத்திற்குமான இணைப்பு பாலமாக உலகத் தமிழ் மாநாடுகள் விளங்கி வருவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை தான்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top