JALLIANWALA BAGH: அமிர்தசரஸ் படுகொலை நிகழ்த்தப்பட்ட தினம் இன்று!!! நூறாவது நினைவு நாள் இன்று!!!
  • 19:01PM Apr 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:01PM Apr 13,2019 Chennai

இன்றிலிருந்து சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 13 APRIL 1919-ம் நாள் இந்தியாவில், அமிர்தசரஸில், உலகையே உலுக்கிய அந்த சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் இந்தியாவின் கருப்பு நாளாகக் கருதப்படுவதே இந்தக் கொடுமையயை பறைசாற்றுவதாக இருக்கும். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்த ஒரு ஒற்றை நிகழ்வு இது. சரி, இந்த சம்பவத்தைப் பற்றி அனைவருக்கும் அறிந்திருந்தாலும், நூறாவது ஆண்டு என்பதால் ஒரு சின்ன நினைவூட்டல்.

JALLIANWALA BAGH என்பது சற்றிலும் மதில்களால் சூழப்பட்ட, சுமார் 7 ACRE அளவிலான ஒரு தோட்டம். சத்ய பால் மற்றும் சைஃபூதீன் கிச்லூ என்ற இரு தலைவர்களை நாடு கடத்தியதற்கு எதிரான அமைதிப் போராட்டமாகத்தான் இது தொடங்கியது.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெனரல் ரெஜினால்டு டையர் ஏதோ போராட்டம் நடக்கப் போவதாக உணர்ந்து போராட்டங்கள் நடத்தத் தடை விதித்திருந்தார். இருப்பினும், இந்த உத்தரவு அனைவரிடமும் கொண்டு செல்லப்பட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அன்று சீக்கியர்களின் முக்கியமான “பய்சகி” என்ற திருவிழா வேறு. போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் என்றில்லாமல், அப்பாவி மக்களும் நிறையப் பேர் அங்கே கூடியிருந்தனர். முக்கிய வாசலாக விளங்கும் அந்தச் சின்ன சந்தை அடைத்தவாறு ஜெனரல் டயர் தன்னுடைய படைப்பிரிவு மொத்தத்தையும் நிறுத்தி வைத்திருந்தார்.

 

துப்பாக்கிச் சூடு ஆரம்பித்ததும், சிதறியோடிய மக்கள் தப்பிவிடக் கூடாது என்று மற்ற வாசல்களை நெருங்க விடாமல், அந்த வாசல்களை நோக்கித்தான் பெரும்பாலான படைகளை சுடச் சொல்லி உத்திரவிட்டிருந்தான் டயர். துப்பாக்கிக் குண்டகள் தீரும்வரை மக்கள் மீது சுட்டுக் கொண்டேயிருந்தனர்.

விசாரணையில், ஒரு 100, 200 பேர் இறந்திருப்பார்கள். கணக்குத் தெரியவில்லை. ஆனால், நான் மொத்தம் 1,650 ரவுண்ட் சுட்டேன் என்றானாம். அது கூட, பின்னர், சேகரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டின் உறைகளை வைத்துச் சொன்னதுதானாம்.

அன்று மொத்தம் இறந்தவர்கள் கிட்டத்தட்ட 379 பேர். 1,100 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள் என்று ஆங்கிலேயர் தரப்பு சொல்கிறது. ஆனால், காங்கிரஸ் தரப்பிலோ, 1000 பேருக்கு மேல் உயிரிழந்ததாகவும், 1500 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

வயது வித்தியாசமின்றி நடைபெற்ற இந்தத் தாக்குதலின் கொடூரம்தான் சுதந்திரப் போராட்டத்திற்கு இன்னொரு பெரிய திருப்பத்தைக் கொடுத்தது என்று கூடச் சொல்லலாம். BRITISH நீதியின் மீது இந்திய மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உடைத்தெறிந்த சம்பவம். இதனால்தான், சுதந்திரப் போராட்டம் அதிக வலுவடைந்தது என்றும சொல்வார்கள். என்ன நடந்து என்ன, சாகும்வரை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமலேயே வாழ்ந்து மடிந்தான் டயர்!!!  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top