RESERVATION: 10% இடஒதுக்கீட்டை அமுல்படுத்த மசோதா தாக்கல்!!! பாஜகவிடம் நறுக்கென்று காங்கிரஸ் கேட்ட கேள்வி!!!
  • 18:08PM Jan 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:08PM Jan 09,2019 Chennai

அதென்னவோ ஐந்து மாநிலத் தேர்தலுக்கு முன் பாஜக இருந்த பவிசு என்ன, இப்போது திடீரென்று GST வரி குறைப்பு, சிலிண்டர் விலை குறைப்பு என்று மாறிய கோலத்தையும் வைத்துப் பார்க்கும் போது, வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் பாஜக சற்று மிரண்டு போய் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் பாஜக தோல்வியடைய நேரும் பட்சத்தில், மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கல்தா கொடுக்கவும் பாஜக தயாராகியுள்ளது வேறு மோடிக்கு எப்படியாவது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மோடிக்கு பதில் நிதின் கட்காரியும், அமித் ஷாவுக்கு பதில் ராஜ்நாத்சிங்கும் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதை நிதின் கட்காரி மறுத்தாலும், சமீப காலத்தில் மோடியின் மீது அதிகமான உள்கட்சித் தாக்குதல்களை இவர்தான் செய்து வருகிறார் என்பது அனைவருக்குமே தெரியும்.

இந்நிலையில் பாஜக வழக்கம் போலக் கையிலெடுத்த ஆயுதம் இடஒதுக்கீடு. அனைத்து விதமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும், பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்குத் தனியாக 10% வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து, அதற்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதையடுத்து, இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சியினர் தரப்பு இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி நேரடியாகவே, தேர்தல் வருவதையொட்டியே மத்திய அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக, 2019 தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வரும் நேரத்தில், இந்த மாதிரியான அறிவித்து, வாதித்து முடிவு செய்யப் போதுமான கால அவகாசம் வழங்கக் கூட வழியில்லாத நிலையில் கொண்டு வந்தது வெறும் அரசியல் லாபத்துக்கென்று குற்றம் சாட்டியது.

குறிப்பாக RAFALE தொடர்பான விவாதங்களிலிருந்து திசைதிருப்பவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இது போதாதென்று, எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் கேட்ட கேள்விதான் பாஜகவை சற்று நிலைகுலைய வைத்தது என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு நறுக்கென்று காங்கிரஸின் ஆனந்த் சர்மா கேட்ட கேள்வி இருந்தது. 2014-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இப்போது வேலைவாய்ப்பை உருவாக்குவதை மறந்து விடுங்கள், 2018-ம் ஆண்டில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர். இடஒதுக்கீடு செய்வதெல்லாம் சரிதான், ஆனால் வேலை வாய்ப்பு எங்கே என்று ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார். கேட்டது நியாயம்தானே!!!     

You Might Also Like These
Related Stories
Top