#Spiritual: வைணவத்தில் கூறப்படும் திருமாலின் 10 சயனக் கோலங்கள்!!!
  • 19:35PM Oct 29,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 19:35PM Oct 29,2019 Kodambakkam

வைணவத்தில் மானிடர்களுக்கு ஏழு பிறவிகள் இருப்பதாக ஆணித்தனமாக நம்பப்படுகிறது. ஏழு வகையிலும் மனிதப்பிறவிக்கு தான் எல்லா சிறப்புகளும் உண்டு என்றும் கூறுகின்றனர். மேலும் இனி மறுபிறவி வேண்டாம் என்று முடிவெடுக்கும் தன்மையும் மனிதப் பிறவிக்கு தான் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதற்கு காரணமாக மற்ற பிறவிகளில் இல்லாத ஒரு தனித்தன்மை மனிதப்பிறவிக்கு இருப்பது தானாம். அது தான் கடவுளை வேண்டி வணங்கி வழிபடும் அறிவாற்றல். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம்
தரிசிக்க வேண்டும் என்கிறது வைணவம். வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்கிற கருத்தும் ஒருபக்கம் இருக்கிறது. அது முற்றிலும் தவறான ஒரு கருத்து. நாம் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் போதே புண்ணிய திருத்தலங்களை தரிசித்துவிட வேண்டும் என்பது தான் சரி. அப்படி நாம் சென்று வணங்க வேண்டிய திருமாலின் பத்து கோவில்கள் பற்றித்தான் நாம் இப்போது பார்க்க போகின்றோம்.

3a.jpg

#1. மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம் 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.

#2. இது 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

#3. புஜங்க சயனம், முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது.

#4. உத்தியோக சயனம், 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போன்ற சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

#5. வீர சயனம், 59 வது திவ்ய தேசமான திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், இங்கு திருமால் வீர சயனத்தில் காட்சி தருகிறார்.

#6. போக சயனம், 40 வது திவ்ய தேசமான சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.

#7. தர்ப்ப சயனம், 105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார்.

#8. பத்ர சயனம், 99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் பத்ர என்றால் ஆலமரத்து இலை என்று பொருள்

#9. மாணிக்க சயனம், 61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

#10. உத்தான சயனம், திருக்குடந்தையில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் ஒரு தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

#Spiritual - இவை எல்லா மக்களும் வாழ் நாளில் கண்டிப்பாக சென்று தரிசிக்க வேண்டிய கோவில்கள் என்று வைணவம் கூறுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top