பிற நாடுகளின் தீபாவளி கொண்டாட்டங்கள்
  • 11:27AM Oct 12,2017 Moffat DG10 9LT, UK
  • Written By vickram
  • Written By vickram
  • 11:27AM Oct 12,2017 Moffat DG10 9LT, UK

 

 தீபாவளி, இந்தியாவில் கொண்டாட படும் மிகப் பெரிய பண்டிகை .ஆனால் தீபாவளி இந்தியாவில் மட்டும் கொண்டாடும் பண்டிகை இல்லை . அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மிக பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது .அதற்கு காரணம் அங்கு வசித்து வரும் இந்தியா மக்கள் .இவற்றை தவிர பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது , இந்தியாவை போன்று உற்சாகத்துடன் .

 இந்தோனேஷியா :

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறிதலவே ஆயினும்மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.பாலியில் அதிகளவு இந்திய மக்கள் உள்ளதால் , அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 மலேஷியா :

ஹரி தீபாவளி என்னும் பெயரில் நாடு முழுவதும் உற்சாகமா கொண்டாடப்படுகிறது.இங்கு பொது விடுமுறை என்பதால் , மக்கள்  தெரு எங்கும் வாண வேடிக்கையுடன் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றன.

 பிஜி:

இந்தியாவை போல் இங்கும், வீடுகளை அலங்கரித்து கொண்டாடப்படுகிறது.

 நேபால்:

திஹார் என்று , இங்கு தீபாவளி அழைக்கப்படுகிறது. செல்வங்களை கொண்டுவரும் நாளாக கொண்டாடப்படுகிறது .

 கயானா:

தென் அமெரிக்காவில் உள்ள நாடான கயானாவில் , தீபாவளிக்கு பொது விடுமுறை விடப்படுகிறது .இங்கு இந்து மக்கள் தொகை அதிகளவில் உள்ளது .

 ஸ்ரீலங்கா :

அண்டை நாடான ஸ்ரீலங்காவில், தீபாவளி விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை .

 தாய்லாந்து:

லோய் கிரதங் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது . தாய்லந்து  காலெண்டரில் 12 வது மாதத்தில் முழு நிலவில் கொண்டாடப்படுகிறது.

 மொரிஷியஸ்:

பொது விடுமுறை நாளான இங்கு , ராமரின் வெற்றியை குறிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top