தன்முனைப்பு மற்றும் வன்மம் – வித்தியாசங்கள்!!!
  • 11:13AM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:13AM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஆங்கிலத்தில் சொல்லும் போது ஒன்றாகத் தோன்றும் இந்த இரு விஷயங்களும் உண்மையில் நேரெதிர்த் தண்மை கொண்டது. பலர் ஆங்கிலத்தில் உள்ள சொல்லாடலைக் கொண்டும், (Assertiveness - Aggressiveness) ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கும் செயல்பாடுகளால் தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்வதுமுண்டு.

Don’t say yes, when you want to say no… இந்த இரண்டுக்கும் உள்ள இடைவெளியைத் தெளிவாகப் புரிய வைக்கும் ஒரு புத்தகம்.  நான் இப்படித்தான் என வெளிப்படையாக இருப்பது தன்முனைப்பு என்றால், நான் இப்படித்தான், என்னை இப்படித்தான் நடத்த வேண்டும் என்பது வன்மம். தன்னைப் பற்றிய முழுமையான புரிதலினால் ஏற்படுவது தன்முனைப்பு, தன்னைப் பற்றிய அதீத நம்பிக்கையின் காரணமாக ஏற்படுவது வன்மம்.  வன்மத்தினால் தூண்டப்படுபவர்கள் ஒரு செயலில் தன் நிலை புரிந்தவுடன் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைப்பாரகள், மாறாக, தன்முனைப்பு தன்னால் முடியும் என்ற செயலைத் தொடும்.  முடியாததை முயற்சி செய்ததாலும், ஏற்கெனவே தெரிந்ததன் காரணமாக வெற்றி தோல்வி பாதிக்காது.

உதாரணத்துடன் சற்று இதனைப் பார்ப்போம்.  ஒரு நிறுவனத்தில் இருவர் ஒரே பணியை செய்ய ஒப்புவிக்கப் படுகிறார்கள்.  அதில் ஒருவர் பணியை சரியாகச் செய்யாமல் அடுத்தவர் தலையில் முழுவதுமாக சாத்தி விடுகிறார்கள். இப்போது அந்த பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. ஒன்று, நிறுவனத்திடம் நிலையை விளக்கி, அவரை பக்குவமாக பணியைச் செய்ய தூண்டுவது.  முடியாத பட்சத்தில், செய்யக் கூடிய வேறொருவரை அவர் இடத்தில் அமர்த்தச் சொல்வது.  இரண்டு. அவரிடம் இது குறித்து பேசாமல், நிறுவனத்திடம் போட்டுக் கொடுக்கவும் விரும்பாமல், நீ செய்யா விட்டால் நானும் செய்ய மாட்டேன். நீயும் சேர்ந்துதானே திட்டு வாங்குவாய் என விட்டுவிடுவது. 

முதலாம் முடிவெடுப்பவர் தன்முனைப்பு வாதி.  பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்று யோசிக்கறார். இரண்டாமவர் ஈவு, இரக்கம் என காரணம் சொன்னாலும் வேலையை முடிக்காமலும், அவரையும் திட்டு வாங்க விடுவதன் மூலமாக பழிவாங்கி வன்மத்தின் வழி போகிறார்.  நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவர் என்றால் இருவரில் எவரை நம்புவீர்கள்???  நண்பர் ஒருவர், வேலைக்கு செல்லும் இடத்திலெல்லாம் வேலையில் அவரது திருப்தி என்பதை மட்டுமே பார்ப்பார்.  அவரால் எதைப் பற்றியும் யோசிக்காமல், வேலையில் கவனத்தை செலுத்தி பணியை நிறைவாக முடித்து விட முடிகிறது. அதே நிறுவனம் சில காரணங்களால் ஊதிய குறைப்பு ஏற்பாடு செய்யும் போது, சிரித்தபடியே வேலைக்கு வரவில்லை என்று விலகி விட்டார்.  தற்போது வேறு நிறுவனத்தில் பணி புரிந்தாலும், இவருக்கு பழைய அலுவலகத்தில் கிடைக்கும் மரியாதையே வேறு. 

தன்முனைப்பு நம்மை பரிட்சீத்துப் பார்க்கச் சொல்லும், பயங்களை எதிர்த்து நிற்கச் சொல்லும், முழுமையான வெற்றியாளனாய் மாற்றும்.  ஆனால், வன்மம் – சொல்லாலோ, செயலாலோ காயப்படுத்தத் தூண்டும். முடியாத பட்சத்தில், நம்மை உள்ளிருந்து அரித்துக் கொண்டேயிருக்கும்.  பழி வாங்குதல் ஒரு முழு நேர வேலை.  நமது மதிப்பீடுகள் பாதிப்படைய, பாதிப்படைய, தன்னம்பிக்கையை குறைத்து ஒரு தோல்வியாளனாய் மாற்றிவிடும். இப்போதைய ட்ரெண்டில் செல்வதானால், தன்முனைப்பு – ஓவியா, வன்மம் – காயத்ரி.

     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top