டேரா சச்சா சௌதா… ராம் ரஹீம் சிங்…
  • 12:42PM Oct 04,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:42PM Oct 04,2017 Chennai, Tamil Nadu 600003, India

சில நாட்களுக்கு முன், இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்பட்ட ராம் ரஹீம் சிங், அவரது ஆதரவாளர்களால் பற்றியெரிந்த பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைப் பற்றி பத்திரிகைகளில் பரபரப்பாகப் பார்த்திருப்போம்.  உண்மையில் மாடர்ன் சாமியார் என அழைக்கப்பட்ட ராம் ரஹீம் சிங் செய்தது என்ன??? 2002 ம் ஆண்டு இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டதாக இவரின் மீது வழக்கு போடப்பட்டு சென்ற மாதம் தீர்ப்பு வெளி வந்தது.  இவரது ஆதரவாளர்களிடம் காணப்பட்ட வெறி, சற்றே யோசிக்க வைத்ததால் இந்தப் பதிவு.

டேரா சச்சா சௌதா என்ற பெயரில் 1948 ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆன்மீக மையம் இதன் மூன்றாவது குருவாக 1990ம் ஆண்டு ராம் ரஹீமுக்குப் பரிவட்டம் கட்டியது.  மிகவும் பழமையான இந்த மையத்தில், 46 நாடுகளைச் சேர்ந்த 60 மில்லியன் பக்தர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  இதன் காரணமாக பணப்புழக்கத்திற்கு எப்போதும் பஞ்சம் வராத நிலையில், ராம் ரஹீமின் வருகை வேறு விதமாக மாற்றியது.  இந்த மையத்தில் மிகப் பெரிய விசேஷம் ஒன்று உண்டு.  அது தலித் மக்களைச் சரிசமமாக நடத்தியது.  இந்தக் காரணத்தால், அதிகமாகத் தலித் இனம் பாதிக்கப்பட்ட ஹரியாணா, பஞ்சாப் தாண்டி ஒரிசா வரைக்கும் (கிட்டத்தட்ட 5 மாநிலங்கள்) இவர்களது செல்வாக்கு வளர்ந்துள்ளது. 

இதனாலேயே தேர்தல் நேரங்களில் இவர்களது தேவை அதிகமாக இருந்த காரணத்தால், அரசியல் கட்சிகள் சொன்னபடி கேட்கத் துவங்கின.  வரும் அனைத்து தலித்களையும் தலையைத் தடவி புனிதமாக்கி, இன்சான் என்று பெயர் இடப்படுவது வாடிக்கை. (இன்சான் என்றால் மனிதன் என்று பொருள்) இவர்கள் மதுவிற்கும், போதைப் பொருளிற்கும் எதிரானவர்கள் என்பது இவர்களுக்கு மகளிர் ஆதரவையும் அள்ளிக் குவித்துள்ளது.  இவர்கள் எவரையும் தகுதி, ஜாதி அல்லது அந்தஸ்து அடிப்படையில் மேலோ கீழோ வைத்துப் பார்ப்பதில்லை. 2002ல் ராம் ரஹீம் தன்னுடைய ப்ரேமீஸ் இருவருடன் தகாத உறவில் ஈடுபடுவதாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தானே நேரடியாகப் பிரதமர் வாஜ்பாய் க்கு கடிதம் எழுத, பின்னர் சிபிஐ விசாரணையில் குற்றம் உறுதிசெய்யப் பட்டது.  

ப்ரேமிஸ் என்பவர்கள் பக்தர்களுக்கு அடுத்தபடி.  டேராவுக்காக வேலை செய்யும்போது உயிருக்கு ஆபத்து வந்தாலும் ஏற்பேன் என்று மரண சாசனத்தில் கையெழுத்துப் போட்டுத்தான் இவர்கள் இந்தப் பதவிக்கே வருகிறார்கள்.  பாதுகாவலர்கள், அடியார்கள் என அனைவருமே இவர்கள்தான். ஆண் பிரேமீஸ்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ததாக வதந்தி இருப்பினும் சரிவர நிரூபிக்கப்படவில்லை.  பெண் பிரேமிக்களுடன் உடலுறவு வைத்துக் கொண்ட குற்றசாட்டுக்காகத்தான் தற்போது சிறையிலிருக்கிறார். டேரா இவ்வளவு பிரபலமானதைப் பற்றிக் கூறும் போது, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் டேராவின் மருத்துவமனைகள் திறந்தே இருக்கும், மானிய விலையில் மளிகைப் பொருட்கள் மற்றும் திருமணம் என்று சொன்னால் சீர்வரிசை என்றெல்லாம் பணத்தை அள்ளி இறைத்திருக்கிறார்கள்.

ஒரு வித்தியாசமான காட்பாதர் கதையில் இருக்கும் அனைத்து விஷயங்களுமே இருப்பதால்தான் இதை பதிவிடத் தோன்றியது.  இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது நீங்கள் சமுதாயத்தை இதுவரை பார்த்தது, புரிந்தது போன்றவற்றின் அடிப்படையிலேயே அமையும்.  பறி போன 29 உயிர்கள் விளையாட்டல்ல.  இவர் தப்பிக்க உதவி செய்ய முயற்சி செய்ததாகவும், கலவரத்தைத் தூண்டியதாகவும் ஹனிப்ரீத் சிங் என்ற இவரது மகளையும் தேடி ஒரு வழியாக நேற்றுக் கைதும் செய்திருக்கின்றனர்.  வடநாட்டு ஊடகங்கள் டேரா சச்சா சௌதா வைப் பற்றிக் கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மையத்திற்குள் பாரிஸ் கோபுரத்திலிருந்து, ஓவல் மாளிகை வரைக்குமான ரிசார்ட்டுகளைப் பற்றி தினமும் பேசிய வண்ணம் உள்ளன.  எது எப்படியாயினும், தமிழில் முன்பே சொல்லியிருக்கிறார் நமது தாடிக்காரப் புலவர்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்        

மெய்ப்பொருள் காண்ப தறிவு...

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top